பிக் பாஸ்: இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சிக்கிய புதிய நபர்! 

 

பிக் பாஸ்: இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சிக்கிய புதிய நபர்! 

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சிக்கிய நபர்களின் பட்டியல் இதோ… 

பிக் பாஸ் சீசன் தொடங்கி ஒரு மதத்தை தாண்டி வெற்றிகரமாகச் சென்று கொண்டு வருகிறது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இதிலிருந்து தற்போது வரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா மற்றும் மீரா ஆகியோர் வெளியேறியுள்ளனர். 

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் படலம் நடைபெற்றது. அது எப்போதும் போல் இல்லாமல் ஓபன் நாமினேஷனாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஹவுஸ் மேட்ஸ் சற்று தயங்கிப் தயங்கி பேசினர். யார் யார்? யாரை நாமினேட் செய்துள்ளார்கள் என்பதை இங்கே பார்ப்போம்… 

சாக்சி: சரவணன், கவின்
லாஸ்லியா: மதுமிதா, சாக்சி
மதுமிதா: கவின், சாக்சி
சேரன்: கவின், ரேஷ்மா
ஷெரின்: கவின், லாஸ்லியா
கவின்: ரேஷ்மா, மதுமிதா
ரேஷ்மா: சேரன், கவின்
சாண்டி: மதுமிதா, அபிராமி
முகன்: ரேஷ்மா, மதுமிதா
சரவணன்: சாக்சி, அபிராமி
தர்ஷன்: மதுமிதா, ரேஷ்மா 
அபிராமி: கவின், மதுமிதா

இதில் இறுதியாக அபிராமி, சாக்ஷி, கவின், ரேஷ்மா மற்றும் மதுமிதா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். வழக்கம் போல் முகன் ராவ், சாண்டி,ஷெரின், தர்ஷன் நாமினேட் ஆகவில்லை. பின்பு எப்போதும் வலையில் சிக்கும் சேரன் மற்றும் சரவணன் தப்பித்துள்ளனர். தற்போது முதல் முறையாக நாமினேஷனில் சிக்கியவர் ரேஷ்மா. அதனால் மனம் தாங்க முடியாமல் நாமினேட் செய்த முகனிடம் சென்று கேள்வி கேட்டு அழுது தீர்த்துவிட்டார்.