பிக்பாஸ் வீட்டுக்குள்ள கசமுசாவை கண்டுபிடீங்க… கட்சிக்குள்ள கண்டுக்காதீங்க கமல்..!

 

பிக்பாஸ் வீட்டுக்குள்ள கசமுசாவை கண்டுபிடீங்க… கட்சிக்குள்ள கண்டுக்காதீங்க கமல்..!

தேர்தல் முடிந்த பிறகும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் முடிந்த பிறகும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை தேடிக் கொண்டு இருக்கிறார்கள். கமல்

தஞ்சாவூர் மக்களவை தொகுதியில், கமலின் மக்கள் நீதி மையம் சார்பில்  போட்டியிட்டவர், சம்பத்ராமதாஸ். முத்துப்பேட்டையைச் சேர்ந்தவராக இருந்தாலும், சென்னையில், ‘செட்டில்’ ஆகி விட்டார். தேர்தலுக்காக மட்டும் தஞ்சையில் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரது ரூம் வாடகை, நிர்வாகிகள் தங்கியிருந்த ரூம் வாடகை, போஸ்டர் அடித்த  செலவு, கார் வாடகை என 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் பாக்கி வைத்திருக்கிறார். கமல்

அந்தப்பணத்திற்கான  ‘செக்’குகளை நிரப்பி கொடுத்து விட்டு  சென்னை கிளம்பி விட்டார். ஆனால் அவர் கொடுத்த அந்த  எல்லா செக்குகளும், பணமில்லாமல், சுவற்றில் அடித்த பந்தாக திரும்பி வந்து விட்டது. இதனால், பணம் பாக்கி இருக்கிறவர்கள் மக்கள் நீதிமய்யத்தின்  உள்ளூர் நிர்வாகிகளை பிடித்து உலுக்கி எடுத்து வருகிறார்கள்.  அவர்கள் சம்பத்துக்கு போனை போட்டால் அவர் எடுப்பதே இல்லையாம்.  இது தொடர்பாக உள்ளூர் நிர்வாகிகள், தலைமைக்கு புகார் அனுப்பிவிட்டு புலம்பி வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது என டாக்லைன் பேசுவார். கமல்

இப்போது அவரது கட்சி வேட்பாளர் ஓடியும் போய்விட்டார். ஒளிந்தும் விட்டார். நல்ல மாற்றம்தான்…