பிக்பாஸ் வாக்குகளில் குளறுபடிகள்! வெளியானது ஷாக்கிங் ஆதாரம்! இப்படியெல்லாமா பண்ணுவாங்க்!?

பிக்பாஸ் வாக்குகளில் குளறுபடிகள்! வெளியானது ஷாக்கிங் ஆதாரம்! இப்படியெல்லாமா பண்ணுவாங்க்!?

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவுற்றாலும் அதைச் சுற்றிக் கொண்டிருக்கும் சர்ச்சைகள் நிறைவுக்கு வராது போல. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பான போது இருந்த வாக்களிக்கும் முறைக்கும் இந்த ஆண்டு நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான வாக்களிப்பு முறைக்கும் நிறைய மாற்றங்களை செய்துள்ளனர். கடந்த ஆண்டு கூகுள் மூலம் மக்கள் நேரடியாக அவர்களது வாக்குகளை பதிவிட்டனர். ஆனால் இம்முறை கூகுள் வாக்குப் பதிவினை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிறுத்தியுள்ளது. 

biggboss

தங்களுக்குப் பிடித்தவர்களுக்கான வாக்குகளை ரசிகர்கள் ஹாட் ஸ்டாரில் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே அறிவித்து விட்டார்கள். இதனால் ரசிகர்கள் வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 10 கோடி வாக்குகள் பதிவாகியிருப்பதாக கமல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஹாட்ஸ்டாரில் 51 ஓட்டுகள் அளிக்கபட்ட புகைப்படம் ஒன்று பெரிய சர்ச்சையை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. தவிர, பிக்பாஸ் வாக்கு பதிவினைப் பற்றிய கேள்வியையும் எழுப்பியுள்ளது. இது எல்லாமே ஆர்யாவின் மணப்பெண் தேடும் கதையாக வெறும் பித்தலாட்டம் மட்டும் தானோ? என்கிற கேள்வியை ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது.

hotstar vote

பொதுவாக ஒரு நபர் 50 வாக்குகள் மட்டும் தான் அளிக்கப்படும். ஆனால், அதே ஹாட் ஸ்டாரில் 51 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் இது சாத்தியம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற பொழுதிலும், இதனை ஹேக்கர்கள் செய்திருக்கலாம் என்று நம்பபடுகிறது.  இதனால் தான் ஒரு தனிப்பட்ட நபருக்கு வாக்குகள் அதிகம் விழுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. இதனால் ஹாட் ஸ்டாரில் வாக்களிக்கும் ரசிகர்களுக்கு நம்பிக்கையை இழக்க வைத்துள்ளது.