பிக்பாஸ் சீசன் 3 – வெல்லப் போவது யார்? – ஒவ்வொருத்தரைப் பற்றியும் விரிவான அலசல்கள்!

 

பிக்பாஸ் சீசன் 3 – வெல்லப் போவது யார்? – ஒவ்வொருத்தரைப் பற்றியும் விரிவான அலசல்கள்!

தமிழ்நாட்டில் இருக்கிற சர்ச்சைகள் போதாது என்று பிக்பாஸ் சீசன் 3 ஏற்படுத்தி வரும் சர்ச்சை அதைவிட பெரிதாக இருக்கிறது. எல்லா ரகளைகளையும் கடந்து, ஆராவாரமாய் போய் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 3. நான்கைந்து கைது முயற்சிகள், தற்கொலை முயற்சி, நீலிக் கண்ணீர் வேஷம் என்று சுவாரஸ்யத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இருக்கிறார்கள்

தமிழ்நாட்டில் இருக்கிற சர்ச்சைகள் போதாது என்று பிக்பாஸ் சீசன் 3 ஏற்படுத்தி வரும் சர்ச்சை அதைவிட பெரிதாக இருக்கிறது. எல்லா ரகளைகளையும் கடந்து, ஆராவாரமாய் போய் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 3. நான்கைந்து கைது முயற்சிகள், தற்கொலை முயற்சி, நீலிக் கண்ணீர் வேஷம் என்று சுவாரஸ்யத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இருக்கிறார்கள் போட்டியாளர்கள். இந்நிலையில், முகநூலில் ம.தொல்காப்பியன் பிக்பாஸ் சீசன் 3ல் வெல்லப் போவது யார் என்று அவருடைய கணிப்பை பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொருவரின் குணாதிசயங்களையும், யார் வெல்வார்கள், அவர்களுடைய தகுதி என்ன என்பதைப் பற்றியும் விரிவான அலசல் கொண்ட நல்ல கட்டுரை!

ma tholakappian

நம் டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக அந்த கட்டுரை அப்படியே அவர் எழுத்துக்களில்…

சாண்டிதான் முதல் பரிசுக்குத் தகுதியானவர் என்பது எனது கருத்து.

எனது பட்டியலில் தர்ஷன், ஷெரீன் மற்றும் சேரன் ஆகியோரும் இருக்கிறார்கள்.

cheran

#சேரன்
சேரனிடம் மூன்று குறைகள் இருக்கின்றன.
1.அவர் மீது ஒரு குற்றம் சுமத்தப்படும் போது அவர் அழுகிறார் அல்லது கோபப்படுகிறார். பிரச்சனையை சந்திக்க தவறுகிறார். அவர் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு தான் செய்தது தான் சரி என்றும் பிடிவாதம் செய்கிறார்.
2.அன்பு என்ற பெயரில் லாஸ்லியாவை கட்டுப்படுத்த முயல்கிறார். லாஸ்லியாவின் தனிமைக்குள் புகுந்து அவருக்கு இடையூறு செய்கிறார். நல்லது செய்கிறேன் என்ற பெயரில் கவினை வெளியேற்ற வெளிப் படையாக முயற்சிக்கிறார்.
3.மூன்றாவது தனது வயதை காரணம் காட்டி மற்றவர்களோடு இணங்கிச் செல்லாமல் தனித்து இருக்கிறார். மேலும் அதே காரணத்துக்காக விளையாட்டுக்களில் ஆர்வம் இல்லாதவராகவும் தன்முனைப்பு இல்லாமலும் இருக்கிறார்.

sherin

#ஷெரின்
ஷெரினைப் பொருத்தவரை ஒரு சுவாரஸ்யம் இல்லாத அமைதி அவரிடம் இருக்கிறது. அவரிடம் நேர்மையும், தெளிவும் இருக்கிறது. அதை அவர் யாருக்காகவும் முன்னெடுத்துச் செல்வது இல்லை.

ஷெரின் தனக்கு பிரச்சினை வரும் போது மட்டும் சீறுகிறார். பிறர் பிரச்சினையின் போது அவர் சில வார்த்தைகளோடு விலகிச் செல்கிறார். விளையாட்டுக்களில் அவரது பங்களிப்பு ‘ஏதோ கடமை’ என்ற அளவில் தான் இருக்கிறது.

மொழி, இனம் பற்றிய சொற்கள் பேசப்படும் போது அவைகளை கடந்து செல்லாமல் அவற்றை ஒரு பிரச்சனையாக மாற்றியது ஷெரீன் செய்த மிக முக்கியமான தவறு.

dharshan

#தர்ஷன்
தர்ஷனைப் பொருத்தவரை அவர் என்னைக் கவர்கிறார். தனக்காகப் பேசுவதை விட பிறருக்காக குரல் கொடுப்பதில் தன்னை முன்னெடுத்துச் செல்கிறார்.

விளையாட்டுக்களில் மற்ற எவரையும் விட சிறந்து விளங்குகிறார். ஈகோ இல்லாத மனிதத் தன்மையை வெளிப்படுத்துவது அவரது சிறப்பு.

மேலும் தனது கருத்தில் உறுதியாக நிற்கும் அவரது குணம் தர்ஷனின் மீது எனது கவனத்தை ஈர்த்து இருக்கிறது. வனிதாவின் மீது ஆரம்பம் முதல் அவர் கொண்டிருக்கும் தனது கருத்தை எந்த நிலையிலும் மாற்றிக் கொண்டதே இல்லை என்பதை நான் நினைவு கூறுகிறேன்.

kavin

#கவின்
கவின் எனது பட்டியலில் இல்லை.
அவர் பாலியல் நோக்கில் தன்னை ஒரு ஆணாகவே வெளிப்படுத்துகிறார். ஒரு நபராக அவர் ஒருபோதும் இல்லவே இல்லை.

கவின் தன்னை ஒரு ஆணழகனாக முன்நிறுத்தியே வலம் வருகிறார். அவர் குதூகலப்படுவதும் கோபப்படுவதும் பாலியல் காரணங்களுக்காக மட்டுமாகத் தான் இருக்கிறது.

தனது ஈகோவால் பெண்களிடம் தவறான முறையில் பழகுகிறார். ஒன்று, அவர்களிடம் வழிகிறார் அல்லது அவர்களை எடுத்தெறிந்து பேசுகிறார்.

அதே காரணத்துக்காக சிலரை வெறுக்கிறார்;சிலர் மீது கோபத்தை வெளிப் படுத்துகிறார். சேரன் போன்றவர்களை தவறாகவும் சித்தரிக்கிறார்.

இரண்டு பெண்களுக்கு இடையே பேதம் பார்க்கிறார். ஒரு பெண்ணோடு சேர்ந்து கொண்டு இன்னொருவருடைய உணர்ச்சியை அலட்சியப்படுத்துகிறார். ஒரு தனி நபருக்கு உரிய மதிப்பை அவர் சாட்சிக்கு அளிக்கவில்லை. சாட்சி வெளியேறும் போதுகூட ‘சாரி’ செல்லி தனது ‘காதலன்’ நினைவை நிறுவுகிறார்.

கமல் சாரிடம் பேசும் ஒவ்வொரு முறையும்
‘அல்ரெடி ரொம்ப பட்டாச்சு சார்’
‘அல்ரெடி ஏகப்பட்ட பிரச்சினை சார்’
‘அல்ரெடி ரொம்ப ஃபீல் ஆயாச்சு சார்’
‘அல்ரெடி பேரு கெட்டு கிடக்கு சார்’
என்ற ரீதியிலான அவரது பேச்சு அவர் தன்னை ஒரு ‘பிளேபாய்’ ரேஞ்சுக்கு நினைத்துக் கண்டு இருப்பதை அம்பலப்படுத்துகிறது.

இதனால் எல்லாம் தான் அவர் எனது லிஸ்ட்டில் இடம்பெறவில்லை

sandy

#சாண்டி
உலக மாந்தர்களை ஆற்றல்கள் சார்ந்து வகைப் படுத்தினால் அந்த பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பவர்கள் மக்களுக்கு ‘எண்டெர்டெயிண்மெண்ட்’ வழங்கும் கலைஞர்களாகத் தான் இருப்பார்கள். அந்த கலைஞர்களிலும் முதல் இடத்தை பிடிப்பவர்கள் காமெடியர்கள்.

ஒரு காமெடியன் உள்ளுக்குள் மிகமிக கோபக்காரனாகவே இருக்கிறான்.
ஒரு காமெடியன் உள்ளுக்குள் சீற்ற மனநிலை உடையவன்.
ஒரு காமெடியன் நல்ல அறிவாளியாகவும் சமூக உணர்வு மேலோங்கியவனாகவும் இருக்கிறான்.
ஒரு காமெடியன் சமூகத்தின் அனைத்து நிலைகளின் மீதும் தனது பார்வையை செலுத்துபவனாகவும் அவற்றின் மீது சொந்தக் கருத்துக்களை உருவாக்கி வைத்திருப்பவனாகவும் இருக்கிறான்.
ஒரு காமெடியன் மற்ற எவரையும் விட உணர்ச்சிவசப் படுபவனாக இருக்கும் அதே நேரத்தில் தன்னை கட்டுக்குள்ளும் வைத்து இருக்கிறான்.

மக்களை எண்டர்டெயின் செய்யும் காமெடியன் தான் மனித வகைகளில் எல்லாம் ஆகச் சிறந்தவன். மேலும் சாண்டி ஸ்கிரிப்டட் காமெடியன் அல்ல. நகைச்சுவை அவரிடம் ஒர் இயல்பூற்றாய் சுரக்கிறது. அந்த வகையில் அவரது தனித்தன்மை கௌரவிக்கப் படவேண்டிய ஒன்று என்பது எனது கருத்து!