பிக்சட் டெபாசிட் வட்டியை குறைத்த எஸ்.பி.ஐ…..

 

பிக்சட் டெபாசிட் வட்டியை குறைத்த எஸ்.பி.ஐ…..

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ரூ.2 கோடிக்கு குறைவான குறிப்பிட்ட நீண்ட கால பிக்சட் டெபாசிட்டுகளுக்கான (நிரந்தர வைப்பு தொகை) வட்டியை 0.15 சதவீதம் குறைத்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) 1 ஆண்டு முதல் 10  ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலம் கொண்ட பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் குறைத்துள்ளது. மேலும், ரூ.2 கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது பொருந்தும். இந்த புதிய வட்டி விகிதம் கடந்த 10ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அந்த வங்கி அறிவித்துள்ளது.

ஸ்டேட் வங்கி

முதிர்வு காலம்                                        பொதுமக்களுக்கான 
                                                                     பழைய வட்டி விகிதம்      புதிய வட்டி விகிதம்

1 முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவு        6.25  சதவீதம்           6.10 சதவீதம்
2 முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவு        6.25  சதவீதம்           6.10 சதவீதம்
3 முதல் 5 ஆண்டுகளுக்கு குறைவு        6.25  சதவீதம்           6.10 சதவீதம்
5 முதல் 10 ஆண்டுகள் வரை                  6.25  சதவீதம்           6.10 சதவீதம்

மூத்த குடிமக்கள்

முதிர்வு காலம்                                      மூத்த குடிமக்களுக்கான 
                                                                   பழைய வட்டி விகிதம்        புதிய வட்டி விகிதம்

1 முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவு       6.75 சதவீதம்                     6.60 சதவீதம்
2 முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவு       6.75 சதவீதம்                    6.60 சதவீதம்
3 முதல் 5 ஆண்டுகளுக்கு குறைவு       6.75 சதவீதம்                     6.60 சதவீதம்
5 முதல் 10 ஆண்டுகள் வரை                  6.75 சதவீதம்                   6.60 சதவீதம்