பிகில் பின்னணி இசை உருவான விதம்: வைரலாகும் வீடியோ!

 

பிகில் பின்னணி இசை உருவான விதம்: வைரலாகும் வீடியோ!

 பிகில் படத்திற்கான பின்னணி இசை சேர்க்கும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

சென்னை:  பிகில் படத்திற்கான பின்னணி இசை சேர்க்கும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

bigil

நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#Bigil #whistle BGM work #Macedonia string session on……… @arrahman sir ❤️❤️❤️???

A post shared by Atlee (@atlee47) on

இந்நிலையில் இயக்குநர் அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகில் படத்திற்கான பின்னணி இசை சேர்க்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி  வருகின்றனர்.தீபாவளிக்கு வெளியாகவுள்ள  இப்படத்தின் டிரைலர்  வரும் அக்டோபர் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.