பிகில் நடிகையுடன் இணையும் கவின்…உற்சாகத்தில் ரசிகர்கள்!

 

பிகில்  நடிகையுடன் இணையும்  கவின்…உற்சாகத்தில் ரசிகர்கள்!

கவினின் அடுத்த திட்டங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளவே, கவினின்  ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். 

பிக் பாஸ்  3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் நடிகர் கவின். சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னதிரையில்  அறிமுகமான இவர் வேட்டையன் கதாபாத்திரம் மூலம் பலரது பாராட்டைப்  பெற்றார். இதையடுத்து நடிகை ரம்யா நம்பீசனுடன் இணைந்து அவர் நடித்த ‘நட்புனா என்னனு தெரியுமா’  திரைப்படம் எதிர்ப்பார்த்தளவு கைகொடுக்கவில்லை.  

 

இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் களமிறங்கி அதிகளவு ஆர்மிகளை சம்பாதித்த பெருமை கவினை சாரும். மேலும் காதல், நட்பு உள்ளிட்ட விஷயங்களால் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார். கவின் ஆர்மிகள் பெய்டு ஆர்மி என்ற விமர்சனம் இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கவினின் அடுத்த திட்டங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளவே, கவினின்  ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். 

ttn

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் நடிக்கும் படத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் வினீத் இயக்கி தயாரிக்கிறார். இதில் கவினுக்கு ஜோடியாக  பிகில் படத்தில் நடித்த நடித்த அமிர்தா நடிக்கிறார். இப்படத்துக்கு  ‘லிப்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தின் பஸ்ட் லுக் நாளை மறுதினம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.