பிகில் சிறப்புக் காட்சியை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது- அமைச்சர் கடம்பூர் ராஜூ ட்வீட் 

 

பிகில் சிறப்புக் காட்சியை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது- அமைச்சர் கடம்பூர் ராஜூ ட்வீட் 

சிறப்புக் காட்சியை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது என்றும் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

Bigil

நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு  ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.  

 

 

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் பிகில் மற்றும் கைதி படங்களுக்கு சிறப்பு காட்சிகள் ரத்துக்கோரி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டதாக விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.