பிகில் இசை வெளியீட்டு விழா நடந்த கல்லூரிக்கு நோட்டீஸ்: அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

 

பிகில் இசை வெளியீட்டு விழா நடந்த கல்லூரிக்கு நோட்டீஸ்: அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

பிகில் இசை  வெளியீட்டு விழா நடந்த  தாம்பரம் சாய் ராம் பொறியில் கல்லூரிக்கு   உயர்கல்வித்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

பிகில் இசை  வெளியீட்டு விழா நடந்த  தாம்பரம் சாய் ராம் பொறியில் கல்லூரிக்கு   உயர்கல்வித்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், கடந்த 19ஆம் தேதி நடந்த இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் சாய் ராம் பொறியில் கல்லூரியில் நடைபெற்றது. 

bigil

இந்த விழாவில் ஆளுங்கட்சியைச் சாடும் வகையில் விஜய்  பேசிய பேச்சுக்கள்  இணையத்தில் வைரலானது. மேலும் ஆளுங்கட்சி அமைச்சர்கள் அதுகுறித்து விமர்சிக்கும் அளவிற்குப் பரவலாகப் பேசப்பட்டது. 

இந்நிலையில் பிகில் இசை  வெளியீட்டு விழா நடந்த  தாம்பரம் சாய் ராம் பொறியில் கல்லூரிக்கு  நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், பிகில் இசை  வெளியீட்டு விழாவில் எதன் அடிப்படையில்  அனுமதி கொடுக்கப்பட்டது என்று  உயர் கல்வித்துறை செயலாளர் கேள்வி  எழுப்பியுள்ளதோடு, அதற்கான விளக்கத்தை அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். 

bigil

முன்னதாக பிகில் போஸ்டரில் கறி வெட்டும் கட்டை மீது விஜய் செருப்புக் கால் வைத்து போஸ் கொடுத்ததற்குக்  கோவையில் கறிக்கடை நடத்தும் சிலர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்  ஒன்றை அளித்துள்ளனர்.மேலும் அவர்கள் போஸ்டரை கிழித்ததுடன், அந்த காட்சியைப் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். 

இதுவொருபுறமிருக்க ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு  ஆளும் அதிமுக அரசை விஜய் மீண்டும் மீண்டும் விமர்சித்த பேசி வருவதால் , ஆளுங்கட்சி தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக விஜய் ரசிகர்கள் குற்றஞ்சாட்டி  வருகின்றனர்.