பா.ம.க நிர்வாகியைத் தாக்கிய போலீசுக்கு வெகுமதியா? – ராமதாஸ், அன்புமணி கொந்தளிப்பு

 

பா.ம.க நிர்வாகியைத் தாக்கிய போலீசுக்கு வெகுமதியா? – ராமதாஸ், அன்புமணி கொந்தளிப்பு

பா.ம.க நிர்வாகியைத் தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வெகுமதி போல பதவி வழங்கப்பட்டிருப்பதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பா.ம.க நிர்வாகியைத் தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வெகுமதி போல பதவி வழங்கப்பட்டிருப்பதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகத்தில் போலீசுக்கு சவால்விட்ட பா.ம.க நிர்வாகி ஒருவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் போலீஸ் பாணியில் பதில் அளித்திருந்தார். இந்த வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் வலியுறுத்தினர். இதனால் அந்த இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவரை பெண்ணாடம் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக நியமித்து உத்தரவிட்டுள்ளதாக பா.ம.க நிர்வாகிகள் கொந்தளிக்கின்றனர்.

ramadoss-890

இது குறித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “வெகுமதி. சின்னசேலம் பா.ம.க. ஒன்றிய செயலர் சக்திவேலை குடி போதையில், ஊரே வேடிக்கை பார்த்த நிலையில் வீடுபுகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர் சுதாகர் முதலில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு அனைத்து மரியாதையுடன் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமரவைக்கப்பட்டார்.

ஆய்வாளர் சுதாகர் மனித உரிமை மீறலுக்காக தண்டிக்கப்பட்டவர். அவர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது கடந்த கால பின்னணி மிக மிக மோசமானது. அவர் மீதான புகாருக்கு விசாரணையின்றியே தண்டிக்க முடியும். ஆனால், வீடியோ ஆதாரம் வெளியாகியும் நடவடிக்கை இல்லை. 

4 நாட்கள் ஆயுதப்படையில் இருந்த சுதாகருக்கு இப்போது அடுத்த வெகுமதியாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல்நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மனித உரிமை மீறல் குற்றவாளிக்கு இப்படி மகுடம் சூட்டப்படுவதற்கு உபயதாரர் யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “பாமக நிர்வாகியை போதையில் வீடு புகுந்து தாக்கிய சின்னசேலம் காவல் ஆய்வாளரை தண்டிக்காமல் வெகுமதியளிப்பதுபோல் பெண்ணாடம் காவல் ஆய்வாளராக நியமித்தது கண்டிக்கத்தக்கது. உடனடியாக அவர்மீது வழக்கு பதிய வேண்டும்; கைது செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.