பா.ம.க கோரிக்கையை நிறைவேற்றிய ஓ.பி.எஸ்! – நன்றி சொல்லும் ராமதாஸ்

 

பா.ம.க கோரிக்கையை நிறைவேற்றிய ஓ.பி.எஸ்! – நன்றி சொல்லும் ராமதாஸ்

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய கோரிக்கையை ஏற்றுத்தான் இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டது என்ற வகையில் டாக்டர் ராமதாஸ் ட்வீட்களை தட்டி வருகிறார்.

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய கோரிக்கையை ஏற்றுத்தான் இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டது என்ற வகையில் டாக்டர் ராமதாஸ் ட்வீட்களை தட்டி வருகிறார்.

 

இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில்,”அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் என்ற பட்ஜெட்  அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன்மூலம் கடலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி  அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வெற்றி!”
“பா.ம.க.வின் மற்றொரு கோரிக்கை நிறைவேறியது. பெண்களின் பாதுகாப்புக்காக  அனைத்து அரசு பேருந்துகளிலும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படும் என்று  நிதிநிலை அறிக்கையில்  நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  அறிவிப்பு” என்று கூறியுள்ளார்.