பா.ஜ. தலைவர்களுக்கு குடைச்சல் கொடுத்த தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

 

பா.ஜ. தலைவர்களுக்கு குடைச்சல் கொடுத்த தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

தேர்தல் விதிமுறை வழக்குகளில் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ. தலைவர்களுக்கு குடைச்சல் கொடுத்த தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் மனைவிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் ஒரு தலைமை தேர்தல் ஆணையரும், 2 ஆணையர்களுக்கும் இருப்பது வழக்கம். தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளை இவர்கள் மூவரும் சேர்ந்துதான் எடுப்பார்கள். தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா உள்ளார். 2 ஆணையர்களில் ஒருவர் அசோக் லவாசா. கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அசோக் லவாசா முக்கிய செய்திகளில் அதிகம் வந்தார். பிரதமர் மோடி  மற்றும் பா.ஜ. மூத்த தலைவர்கள் மீதான தேர்தல் நடத்தை விதிமுறைகள் வழக்குகளில் இவர் மட்டுமே எதிர்மறையான கருத்தை தெரிவித்தார்.

அசோக் லவாசா

இந்நிலையில்,அசோக் லவாசாவின் மனைவி நாவல் எஸ் லவாசாவுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அன்னிய செலாவணி தொடர்பாக தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் முரண்பாடுகள் இருப்பதால் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக நாவல் எஸ் லவாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், என் சம்பந்தப்பட்ட அனைத்து வரிகளையும் செலுத்தி விட்டேன் மற்றும் இதர வருவாய் ஆதாரங்களும் வருமான வரி சட்டங்களுக்கு உள்பட்டது. வருமான வரித்துறைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன்.

வருமான வரித்துறை

2019 ஆகஸ்ட் 5 முதல் நான் பெற்ற அனைத்து வருமான வரித்துறையின் அனைத்து நோட்டீஸ்களுக்கும் பதில் அளித்துள்ளேன். மேலும் தற்போது நடைபெறும் வருமான வரித்துறையின் நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை வருமான வரித்துறைக்கு பதில் வரவில்லை என  தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.