பா.ஜ.க துணைத் தலைவர் அரசகுமார் திமுகவில் இணைந்தார் !

 

பா.ஜ.க துணைத் தலைவர் அரசகுமார் திமுகவில் இணைந்தார் !

எம்.ஜி ஆருக்கு அடுத்ததாக நான் ரசித்த தலைவன் மு.க ஸ்டாலின் தான். அவர் விரைவில் அரியணை ஏறுவார் என்று தெரிவித்திருந்தார்.

புதுக்கோட்டையில் நடந்த திமுக நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்ட பா.ஜ.க துணைத் தலைவர் அரசகுமார், ‘ எம்.ஜி ஆருக்கு அடுத்ததாக நான் ரசித்த தலைவன் மு.க ஸ்டாலின் தான். அவர் விரைவில் அரியணை ஏறுவார் என்று தெரிவித்திருந்தார். இது பா.ஜ.க கட்சியினரிடையே பெரும்  சலசலப்பை  ஏற்படுத்தியது. அதற்கு பதிலளித்த அரசகுமார், நான் ஏன் அவ்வாறு பேசினேன் என்று தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் மாநில பொறுப்பு தலைவர் கேசவ விநாயகத்திடம் விளக்கமளித்து விட்டேன் என்று கூறினார்.

ttn

இந்நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் பா.ஜ.க துணைத் தலைவர் அரசகுமார் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்தார். அதன் பிறகு, அவர் திமுக கட்சியில் இணைந்து கொண்டார்.