பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்!

 

பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்!

மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை: மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு அதிர்கொள்வது என்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக செய்தியாளர்களிடம் கூட்டாக பேட்டியளித்தனர்.

குறிப்பாக, பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், அச்சந்திப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். ‘தேசத்தைப் பாதுகாக்க இது ஜனநாயக நிர்பந்தம்’ என்று சந்திரபாபு நாயுடு அவர்கள் சொன்னதை நான் வழிமொழிகிறேன்!

பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல் சொன்ன கருத்து முக்கியமானது. மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும்!” என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.