பா.ஜ.கவை பதம் பார்க்கணும்… தி.மு.க.,வை வேரறுக்கணும்… பலமாக ஸ்கெட்ச் போடும் ரஜினி..!

 

பா.ஜ.கவை பதம் பார்க்கணும்… தி.மு.க.,வை வேரறுக்கணும்… பலமாக ஸ்கெட்ச் போடும்  ரஜினி..!

தனக்குப் பின்னால் இருக்கும் இஸ்லாமிய, கிறிஸ்துவ பலத்தை உடைக்க, திமுக திட்டமிடுவதாகக் கூறி அதைத் தடுக்கும் பணிகளிலும் ரஜினி இறங்கிவிட்டார்.

ரஜினி முழு அரசியல்வாதியாக களமிறங்க முடிவெடுத்து விட்டார்.  ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளையும்  அரசியல், கலை நண்பர்களையும் வீட்டுக்கு அழைத்து வெகு நேரம் விவாதித்து வருகிறார்.

 நாம முழுமையாக அரசியலுக்கு வரப் போகிறோம். எல்லோரும் தயாராக இருங்கள். ஆரம்பமே அதகளமாக இருக்க வேண்டும். முதல் மாநாடு  மதுரையில் நடத்தப் போகிறோம். சிந்தாமல் சிதறாமல் மக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும். 2020 ஜூலைக்குள் மாநாடு நடத்தியாக வேண்டும் என கூறி இருக்கிறார்.Rajini

இதற்கிடையே தன்னை சந்தித்தவர்களிடம் தமிழகத்தில் கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்கு சதவிகிதம் பற்றியும், அதைத் தக்கவைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் ரகசிய முயற்சிகளை பற்றி பேசியிருக்கிறார். தான் ஆன்மிக அரசியல் என்று பேசிவருவதால் தனக்கிருக்கும் இஸ்லாமிய, கிறிஸ்துவ ரசிகர்களைக்கூட தனக்கு எதிராகத் திருப்பும் வேலைகளை திமுக செய்து வருவதாக சந்தேகப்படுகிறார் ரஜினி.

 modi

இதற்காகவே தன்னை பாஜகவின் ஆள் என்று சித்திரிக்க முயற்சி செய்வதாகவும் ரஜினி தன்னை சந்தித்தவர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ‘என்னை பிஜேபி ஆள்னு சொல்றாங்க. ஆனா, தேர்தல் ரிசல்ட்ல காங்கிரஸ் தோற்றதால் ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகக் கூடாது. வலிமையான எதிர்க்கட்சி இந்தியாவுக்கு தேவை எனச் சொன்னேன். 

அப்போது பாஜகவினர் கூட என்னை எதிரியாகத் தான் பார்த்தார்கள். இப்படியே பார்த்தால் என்னை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சியோட ஆளாக பார்க்க வேண்டியிருக்கும்’ என்று சொல்லிச் சிரித்த ரஜினி,  ‘என்னை பாஜக ஆள் என முத்திரை குத்தப் பார்த்து என்னிடம் இருக்கிற கிறிஸ்துவ, முஸ்லிம் சப்போர்ட்டை உடைக்கப் பார்க்கிறது திமுக. அதற்கு நான் இடம்கொடுக்க மாட்டேன்’ என்றும் சொல்லியிருக்கிறார் ரஜினி.amit shah

இதன் மூலம் ஸ்டாலினையே இப்போதைக்கு தன் எதிரியாக ரஜினி கருதுகிறார் என்பதையும், தனக்குப் பின்னால் இருக்கும் இஸ்லாமிய, கிறிஸ்துவ பலத்தை உடைக்க, திமுக திட்டமிடுவதாகக் கூறி அதைத் தடுக்கும் பணிகளிலும் ரஜினி இறங்கிவிட்டார்.