பாலியல் வழக்கில் இளைஞர் கைது: என் மகனை தூக்கிலிடுங்கள்: தாய் உருக்கம்!

 

பாலியல் வழக்கில் இளைஞர் கைது: என் மகனை தூக்கிலிடுங்கள்: தாய் உருக்கம்!

எனது மகன் குற்றவாளி எனத் தெரிந்தால் தூக்கிலிடுங்கள். ஆனால், ஒட்டுமொத்த பீகாரிகளையும் தாக்காதீர்கள் என குஜராத் பாலியல் வழக்கில் கைதான இளைஞரின் தாய் உருக்கமாகக் கூறியுள்ளார்.

குஜராத் : எனது மகன் குற்றவாளி எனத் தெரிந்தால் தூக்கிலிடுங்கள். ஆனால், ஒட்டுமொத்த பீகாரிகளையும் தாக்காதீர்கள் என குஜராத் பாலியல் வழக்கில் கைதான இளைஞரின் தாய் உருக்கமாகக் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் 14 வயது சிறுமி கடந்த மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, குஜராத் மாநிலம் முழுவதும் வாடா மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநில தொழிலாளர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். தொடர்ந்து, அம்மாநில தொழிலாளர்கள் அச்சம் காரணமாக குஜராத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை சுமார் 50,000 தொழிலாளர்கள் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி விட்டதாகவும், கடந்த வாரத்தில் மட்டும் 20,000 தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிகிறது.

இதனிடையே, வெளி மாநில இளைஞர்களைத் தாக்கியது தொடர்பாக இதுவரை 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக 35 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கைதான இளைஞரின் தாய் குஜராத் மாநிலத்தவர்களுக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். “எனது மகன் குற்றவாளி எனத்தெரிந்தால் அவனைத் தூக்கிலிடுங்கள். ஆனால், எனது மகன் செய்த பாவத்திற்காக ஒட்டு மொத்த பீகாரிகளையும் தாக்கவோ, மாநிலத்தை விட்டு வெளியேற்றவோ வேண்டாம்” என அவர் கூறியுள்ளார்.