பாலியல் வன்கொடுமைக்கு எதிரான படத்தில் நந்திதா

 

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான படத்தில் நந்திதா

நடிகை நந்திதா பாலியல் வன்கொடுமைக்கு எதிரான படத்தில் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகை நந்திதா பாலியல் வன்கொடுமைக்கு எதிரான படத்தில் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் அட்டகத்தி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா. அதையடுத்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி என பல படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு,மலையாளம் என பிஸியாக நடித்து வருகிறார்.இவர் தற்போது பாலியல் வன்கொடுமைக்கு எதிரான படத்தில் நடித்துவருகிறார். ஐபிசி 376 என்று பெயரிட்டுள்ள இப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இப்படத்தைப் பிரபு சாலமன், பாலசேகரன் ஆகியோர்களிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ராம்குமார் சுப்பாராமன் இயக்குகிறார். திரில்லர் படமாக உருவாகும் இதில் நந்திதா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். 

ipc 376

தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தை பற்றி இயக்குநர் ராம்குமார் சுப்பாராமன் கூறும்போது, ‘பெண்களை இழிவுபடுத்தி வந்துகொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில், இது பெண்களின் பெருமை பேசும் படமாக இருக்கும். த்ரில்லர், சஸ்பென்ஸ் என்பதை தாண்டி யூகிக்க முடியாத மற்றொரு விஷயமும் படத்தில் இருக்கும். பாலியல் வன்கொடுமைக்கு எதிரான படம் தான் இது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான தண்டனை சட்டம் ‘ஐபிசி 376’ இந்தப் படம் வெளியான பிறகு பெண்கள் வரவேற்பார்கள். பெண்கள் கொண்டாடும் படமாகவும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்தப் படம் இருக்கும். 

ipc 376

பொள்ளாச்சி சம்பவத்துக்குப் பிறகு பெண்கள் பாது காப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றிய பேச்சுகள் அதிகரித்திருக்கிறது. இந்தப் படமும் அப்படியொரு விழிப்புணர்வைப் பெண்களுக்குக் கொடுக்கும். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது’ என்று கூறியுள்ளார்.