பாலியல் பலாத்கார வழக்கு: அமமுக வேட்பாளருக்கு முன் ஜாமீன்!

 

பாலியல் பலாத்கார வழக்கு: அமமுக வேட்பாளருக்கு முன் ஜாமீன்!

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமுவுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: பாலியல் புகாரில் சிக்கியுள்ள பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமுவுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பாலியல் புகார்

kathirkamu

பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, பின் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கதிர்காமு மீது பெண் ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். 

கதிர்காமு மீது வழக்குப்பதிவு

harassment

அந்தப் புகாரில், ‘கடந்த 2015 ஆம் ஆண்டு தந்தையின் சிகிச்சைக்காக கதிர்காமுவின் மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது மூட்டுவலிக்காக நானும் சிகிச்சை பெற முற்பட்டேன். அப்போது கதிர்காமு எனக்கு மயக்க ஊசி போட்டு, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்து நான் அவரிடம் நியாயம் கேட்க, என்னை ஆபாச படம் எடுத்து வைத்திருப்பதாகக் கூறி மிரட்டினார். இதை தொடர்ந்து என்னை பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். 2017ஆம் ஆண்டு அவர் எம்எல்ஏ ஆன பிறகு அவரது அலுவலகத்துக்குச் சென்று என் புகைப்படங்கள், வீடியோவை கேட்டேன். அப்போது அவருடன் இன்னும் 3 எம்எல்ஏ-க்கள் இருந்தனர். அவர்கள் சென்ற பிறகு அவர்களும் என் மீது ஆசைப்படுவதாகக் கூறினார்’ என்று குறிப்பிட்டுள்ளார். அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கதிர்காமுவுக்கு முன் ஜாமீன்

hc

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கதிர்காமு,  இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. இந்த வழக்கைச் சந்திக்க நான் தயாராக உள்ளேன். இது முழுக்க முழுக்க, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார். மேலும் தனக்கு முன்ஜாமீன் வழங்க மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
 நேற்று (ஏப்ரல் 12) இந்த வழக்கை விசாரித்த  விசாரித்த நீதிபதி தண்டபாணி கதிர்காமுவுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தேர்தல் முடியும் வரை அவரை கைது செய்யக் கூடாது என்றும், தேர்தல் முடிந்த பிறகு விசாரணைக்கு அழைக்கலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கதிர்காமுவுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் வாசிக்க: எனது பள்ளிப் படிப்பை நிறுத்துவிட்டு 13 வயதிலேயே வேலையில் சேர்த்தாயே…. நடிகை சங்கீதாவின் பரபரப்பு கடிதம்!