பாலியல் குற்றவாளி ஹார்வி வெய்ன்ஸ்டீன் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால்… வைரமுத்துவை மறைமுகமாக தாக்கிய சின்மயி

 

பாலியல் குற்றவாளி ஹார்வி வெய்ன்ஸ்டீன் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால்… வைரமுத்துவை மறைமுகமாக தாக்கிய சின்மயி

தொல்லை அளித்ததாகப் பாடகி சின்மயி குற்றச்சாட்டியதையடுத்து  தொடர்ந்து சமூகவலைதளங்களில் பாலியல் கொடுமை குறித்து பேசி வருகிறார்.

மீடூ மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை உலகிற்குத் தோலுரித்துக் காட்டிவந்தனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் பாடகி சின்மயி குற்றச்சாட்டியதையடுத்து  தொடர்ந்து சமூகவலைதளங்களில் பாலியல் கொடுமை குறித்து பேசி வருகிறார்.

tn

சமீபத்தில் 80ற்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மன்ஹாட்டன் கிரிமினல் நீதிமன்றத்தில் நியூயார்க் நீதிபதி, 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து சின்மயி தனது டிவிட்டர்  பக்கத்தில் ஹார்வி தண்டனையைக் குறிப்பிட்டு, ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் இந்தியாவில் பிறந்து இருக்கலாம். குறிப்பாக தமிழ்நாட்டில். அவர் நட்சத்திரங்கள், அரசியல்வாதிகளுடன் விருந்தில் கலந்து கொண்டு கவிதைகள் எழுதியிருக்கலாம். அதுமட்டுமின்றி  கண்டிப்பாக 100% அரசியல் கட்சிகள் உங்களை ஆதரித்திருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது சின்மயி   வைரமுத்துவை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார்.