பாய்ந்த சிறுத்தை… ஓடிய இளைஞர்கள்… நூலிழையில் தப்பிய அதிசயம்!

 

பாய்ந்த சிறுத்தை… ஓடிய இளைஞர்கள்… நூலிழையில் தப்பிய அதிசயம்!

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை நோக்கி சிறுத்தை பாய்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒடிசாவைச் சேர்ந்த வன சரக அதிகாரி சுசந்தா நந்தா வீடியோ ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், சாலை ஓரத்திலிருந்த புதர் ஒன்றில் வனவிலங்கு ஒன்று பதுங்கியிருப்பதுபோல உள்ளது. இதைக் கண்ட வீடியோ எடுத்த நபர், தன்னுடைய வாகனத்தில் பாதுகாப்பாக அமர்ந்திருக்கிறார். அந்த விலங்கு சென்றதும் செல்லலாம் என்று காத்திருந்ததுபோல இருக்கிறது. திடீரென்று மோட்டார் சைக்கிள் ஒன்று அவர்களைத் தாண்டி வேகமாக பாய்கிறது.

leopard

அப்போது மறைந்திருந்த சிறுத்தை ஒன்று மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது பாய்கிறது. ஒரு சில விநாடிதான், பைக் வந்த வேகத்தால் சிறுத்தையின் குறி தப்பிக்கிறது. சிறுத்தை வேகமாக காட்டுக்குள் ஓடுகிறது. நூலிழையில் தப்பிய இளைஞர்கள் வேமாக பைக்கில் சென்று மறைகின்றனர்.
இந்த வீடியோஉடன் அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “எப்படி சிறுத்தை தவறவிட்டது… உண்மையான உரிமையாளருக்கு (சிறுத்தை) வழிவிட்டு நாங்கள் காத்திருந்தோம். அப்போது மோட்டார் சைக்கிள் ஒன்று அதன் வழியை எடுத்துக்கொள்ள முயன்றது. இதுவே அவர்களின் கடைசி பயணமாக இருந்திருக்கும். வனத்தை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவை அவர்தான் எடுத்தாரா, எங்கு எடுத்தார் என்று குறிப்பிடவில்லை. இருப்பினும் சமூக ஊடகங்களில் அது வைரலாகி உள்ளது.