பாமக ராமதாஸ்தான் முக்கியம்… அதிமுக அமைச்சரை தூக்கியடித்த எடப்பாடி..!

பாமக ராமதாஸ்தான் முக்கியம்… அதிமுக அமைச்சரை தூக்கியடித்த எடப்பாடி..!

விக்கிரவாண்டி தொகுதியின் பொறுப்பாளராக உள்ளூர் அமைச்சரன சட்டத்துறை அமைச்சர் நம்பாமல் எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமானவர்களையே நியமிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

விக்கிரவாண்டி தொகுதியின் பொறுப்பாளராக உள்ளூர் அமைச்சரன சட்டத்துறை அமைச்சர் நம்பாமல் எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமானவர்களையே நியமிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

ramadoss

உள்ளூர் அமைச்சராக சி.வி. சண்முகம் கெத்துக் காட்டினாலும்  அவரால் அனைவரையும் அரவணைத்து செல்வதில் சிக்கல் இருக்கிறது.  குறிப்பாக ராமதாஸோடு   இணக்கமாக செல்வதில் அவருக்கு மனதளவில் விருப்பம் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.  தலைமைக்காக கட்டுப்பட்டு அவர் பொறுப்பை ஏற்றாலும் தனித்தே செயல்படுவார் என்று எடப்பாடி பழனிசாமியும் அதிமுக நிர்வாகிகளும் கருதுகின்றனர். 

எனவே, தலைவர்களோடு மிகவும் நெருக்கமாக உள்ள நிர்வாகிகளை களத்தில் இறக்க எடப்பாடி முடிவு செய்துள்ளாக கூறுகிறார்கள். இன்னொரு காரணம் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும்  அங்கு செல்வாக்கு உள்ளதால் அதை காலி செய்ய ராமதாஸ் ஆதரவு நிச்சயம் வேண்டும் என அதிமுக தலைமை கருதுகிறது. 

edappadi and ramadoss

பாமக ஒத்துழைத்து களப்பணி செய்தால் தேர்தலில் செம்மையாக செயல்படலாம் என்பது எடப்பாடியாரின் கணக்கு. எனவே, பாமக நிர்வாகிகளை கவனித்து அவர்களை தேர்தல் வேலை வாங்க,  அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்க தனியாக ஒருவரை நியமிக்க முடிவு செய்துள்ளாராம். ஆனாலும், விக்கிரவாண்டி தேர்தலில் புது பொறுப்பாளருடன் இணைந்து உள்ளூர் அமைச்சர் செயல்படுவார் என்ற பேச்சு ஓடுகிறது.