பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன் மண்ணில் உதிர்ந்த நாள்!

 

பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன் மண்ணில் உதிர்ந்த நாள்!

பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த, பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் பத்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த, பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் பத்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கிங்க் ஆஃப் பாப் என்ற புகழுக்கு சொந்தக்காரர். நடனக் கலையை புதிய பரிணாமத்துக்கு கொண்டு சென்றவர். சிறந்ததோர் பாடல் ஆசியராகவும் திகழ்ந்தவர். இத்தகைய பெருமைகளுக்கு உரியவர் மைக்கேல் ஜாக்சன்.

1

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கடந்த 1958-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி பிறந்த இவரின் முழு பெயர் மைக்கேல் ஜோசப் ஜாக்சன் என்பதாகும். தாமே பாடல்களை எழுதி, இசையமைத்து நடனமாடும் வித்தகராக விளங்கிய மைக்கேல் ஜாக்சனின், புதுமையான நடனத்திற்கு மயங்காதவர்களே இல்லை எனலாம்.. அவரது தனித்துவமிக்க திறமைக்கு மற்றுமோர் சாட்சி, அவர் முன்னெடுத்த Anti Gravity Lean எனப்படும் தரையை நோக்கி சாயும் நடன உத்தி.

2

BAD என்ற தொகுப்பில் இந்த உத்தி இடம்பெற்றுள்ளது. புவியூர்ப்பு விசைக்கு எதிராக மைக்கேல் ஜான்சன் சாய்ந்தது எப்படி என்பது உலகத்தார் மத்தியில் வியப்படைய செய்த ஒரு கேள்வி.

மேடையில் நடனம் ஆடும்போது அவர் பயன்படுத்தி பிரத்யேக காலணியே இதற்கான பதில். ஆம். சிறியதோர் தக்கையில் காலணியின் பின்புறம் பொருந்துமாறு வைத்து கொள்வார் ஜாக்சன். இதனால் தரையை நோக்கி சாயும் போது, கீழே விழாமல் நேர்த்தியாக தற்காத்து கொள்ள அவரால் முடிந்தது. நிகழ்ச்சி ஒன்றின்போது ஏற்பட்ட விபத்தில் தமது மூக்கு பாதிக்கப்பட்டதை அடுத்து, பலமுறை ஒட்டுருப்பு அறுவை சிகிச்சையை செய்து கொண்டார் மைக்கேல் ஜாக்சன்.

3

இணையில்லா திறமையால் பல விருதுகள் இவரை தேடி வந்தடைந்தன. இவ்வாறு தமது இசையால், நடனத்தால் ஏராளமானோரை மகிழ்வித்த மைக்கேல் ஜாக்சன், தமது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்துள்ளார். அதன் எதிரொலியாக வலி நிவாரணிகளை பயன்படுத்த தொடங்கினார். இவ்வலி நிவாரண மாத்திரைகளே பின்னாளில், அவரின் உயிரை குடிக்கும் அரக்கனமாக மாறிப்போனது கூறப்படுகிறது.

4

இத்தகைய மாபெரும் கலைஞனான மைக்கேல் ஜாக்சன், கடந்த 2009-ம் ஆண்டு இதேநாளில்தான் உயிரிழந்தார். அவர் மறைந்திருந்தாலும், பாப் உலகில் அவர் தொட்ட சாதனை சிகரங்கள், என்றென்றுக்கும் அவரை நினைவுப்படுத்திக் கொண்டேதான் இருக்கும்.