பாபர் மசூதி இடிப்பு: குற்றமிழைத்தவர்களுக்கு உடனடி தண்டனை தேவை!

 

பாபர் மசூதி இடிப்பு: குற்றமிழைத்தவர்களுக்கு உடனடி தண்டனை தேவை!

மசூதியை இடித்தது சட்ட விரோதம் – நீதிமன்ற தீர்ப்புபடி விரோதம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள்மீதான வழக்கைத் துரிதப்படுத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும்

திராவிட கழகத்தின்  தலைவர்  கி.வீரமணி தலைமையில் இன்று அக்கட்சியின்  செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை பெரியார்  திடலில் காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் ‘நீட்’ மற்றும் புதிய கல்விக் கொள்கை நீக்கம் – நடைபாதைக் கோவில்கள் அகற்றப்படுத்த கோரியும் – தலைவர்களின் சிலைகளை அவமானப்படுத்துவோர்மீது நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் – பாபர் மசூதி தொடர்பான வழக்கில்- மசூதியை இடித்தது சட்ட விரோதம் – நீதிமன்ற தீர்ப்புபடி விரோதம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள்மீதான வழக்கைத் துரிதப்படுத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும் என்ற தீர்மானம் உள்பட 10 தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

அவை பின்வருமாறு: 

neet

தீர்மானம் எண் 1:   இரங்கல் தீர்மானம்

தீர்மானம் எண் 2 (அ): ‘‘நீட்’’ தேர்வு நீக்கப்படவேண்டும்

தீர்மானம் எண் 2 (ஆ): 27 சதவிகித இட ஒதுக்கீடு!
 

education

தீர்மானம் எண் 3: தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு
 

தீர்மானம் எண் 4: மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையின் வீழ்ச்சியும் – மதவாத திசை திருப்பலும்!
 

தீர்மானம் எண் 5: பள்ளியில் மதம், ஜாதி அடையாளங்கள் கூடாது

ayodhya

 

தீர்மானம் எண் 6: பாபர் மசூதியும் – உச்சநீதிமன்றத் தீர்ப்பும்!

பாபர் மசூதி இடிப்புத் தொடர்பான வழக்கையும் விரைவாக நடத்தி, குற்றமிழைத்தவர்கள்மீதான தண்டனை உறுதி செய்யப்பட ஆவன செய்யுமாறு மத்திய அரசையும், உச்சநீதிமன்றத்தையும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது. தாமதிக்கப்பட்ட தீர்ப்பு என்பது மறுக்கப்பட்ட ஒன்றே என்பதையும் இச்செயற்குழு நினைவூட்டுகிறது.
 

தீர்மானம் எண் 7: சிலைகளை அவமதிக்கும், கலவரத்தைத் தூண்டும் சங் பரிவார்கள்மீது நடவடிக்கை தேவை!
 

தீர்மானம் எண் 8: நடைபாதைக் கோவில்கள் – அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள கோவில்களை அகற்றுக!
 

தீர்மானம் எண் 9: சட்டம் ஒழுங்கு நிலை

சட்ட ஒழுங்கை நிலை நிறுத்துவதில் முழு கவனம் செலுத்துமாறு தமிழ்நாடு அரசை இச்செயற்குழுக் கேட்டுக் கொள்கிறது.
 

தீர்மானம் எண் 10: திருச்சியில் 2020 பிப்ரவரி முதல் வாரத்தில் மதவெறி – ஜாதி வெறி முறியடிப்பு  மனிதநேய மாநாடு