பாத்திமா விவகாரத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்காவிட்டால் பேராசிரியர்கள்…சென்னை ஐஐடி இயக்குநருக்கு மிரட்டல்!

 

பாத்திமா விவகாரத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்காவிட்டால் பேராசிரியர்கள்…சென்னை ஐஐடி இயக்குநருக்கு மிரட்டல்!

சுதர்சன் பத்மநாபன் தான் காரணம்  அவர் தன்னை மனரீதியாகத் துன்புறுத்தினார் என்று குறிப்பிட்டிருந்தார். 

கேரளாவைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை ஐஐடி.யில் முதுநிலை முதலாமாண்டு படித்து வந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி விடுதியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.அரசியல், திரைத்துறை, சமூக ஆர்வலர்கள் என அனைவரும் இந்த விவாகரம் குறித்து கருத்து தெரிவித்திருந்தனர்.  இதையடுத்து  சென்னை ஐஐடி.யில் நேரில் சென்று ஆய்வு செய்த காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆய்வு நடத்தியதோடு, மத்திய குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 

TTN

இந்த விவகாரம் குறித்து முதலில் விசாரணை மேற்கொண்ட கோட்டூர்புரம் போலீசார்  பாத்திமா லத்தீப் குறைவான மதிப்பெண் எடுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்திருந்தது. ஆனால் பாத்திமா லத்தீப் தனது மொபைலில் தற்கொலைக்கு ஐஐடியில் இணைபேராசியராக பணியாற்றும் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம்  அவர் தன்னை மனரீதியாகத் துன்புறுத்தினார் என்று குறிப்பிட்டிருந்தார். 

இதையடுத்து பாத்திமா செல்போனை ஆய்வு செய்த சைபர் கிரைம் பிரிவினர்,  பாத்திமாவின் தற்கொலைக் குறிப்பு மற்றும் செல்போன் பதிவுகள் போலியானது அல்ல என்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையானது நீதிமன்றம் வாயிலாக  மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

TTN

இந்நிலையில், சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு கடந்த 2 ஆம் தேதி கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில்  ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள். இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
இதுகுறித்து   ஐஐடியின் பதிவாளர் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் யார் மிரட்டல் கடிதம் அனுப்பியது என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.