பாத்திமா பாபுவா இது? வைரலாகும் சிறு வயது புகைப்படம்!

 

பாத்திமா பாபுவா இது? வைரலாகும் சிறு வயது புகைப்படம்!

பாத்திமா பாபுவாவின் சிறு வயது புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

சென்னை: பாத்திமா பாபுவாவின் சிறு வயது புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ரசிகர்களுக்குப் பல பரிட்சியமான போட்டியாளர்கள் உள்ளனர். அந்த வகையில் சின்னதிரை மற்றும் வெள்ளித்திரையில் ஒரு கலக்கு கலக்கி வந்தவர் பாத்திமா பாபு. 

தூதர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இவர் அதையடுத்து ஜெயா டிவியில் பல ஆண்டுகளாகச் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். பின்பு ‘கல்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மட்டும் இன்றி பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதே போல் சின்னதிரை தொடர்களிலும் நடித்து வருகிறார். 

இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதால், இவரது ரசிகர்கள் இவருக்கு ஆர்மி ஒன்றை துவங்கியுள்ளனர். அதில் இவரை பற்றிய புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், பாத்திமா பாபு இளம் வயது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.