பாதுகாப்பு படை வீரரரின் வேண்டுகோளுக்கு செவிக்கொடுத்து 89 வயது முதியவருக்கு உதவிய முதலமைச்சர்!

 

பாதுகாப்பு படை வீரரரின் வேண்டுகோளுக்கு செவிக்கொடுத்து 89 வயது முதியவருக்கு உதவிய முதலமைச்சர்!

ரவிக்குமார் என்ற பாதுகாப்பு படை வீரர் ஒருவர், முதலமைச்சர் பழனிசாமியிடம் ஒரு உதவி கேட்டிருந்தார். அதாவது, ட்விட்டரில், “ஐயா நான் மத்திய பாதுகாப்பு படையில் குஜராத் அகமதாபாத்தில பணியில் உள்ளேன். எனது தாயார் 89 வயது வீட்டில் தனியாக உள்ளார்

ரவிக்குமார் என்ற பாதுகாப்பு படை வீரர் ஒருவர், முதலமைச்சர் பழனிசாமியிடம் ஒரு உதவி கேட்டிருந்தார். அதாவது, ட்விட்டரில், “ஐயா நான் மத்திய பாதுகாப்பு படையில் குஜராத் அகமதாபாத்தில பணியில் உள்ளேன். எனது தாயார் 89 வயது வீட்டில் தனியாக உள்ளார் உடல் நிலை சரியில்லை எனக்கு தந்தையும் இல்லை சகோதரனும் இல்லை எனது தாயாருக்கு மருத்துவ உதவி தேவை” என முதலமைச்சர் பழனிசாமிக்கு டேக் செய்து வேண்டுகோள் விடுத்திருந்தார். 

ரவிக்குமாரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த முதலமைச்சர், அவரது வீட்டிற்கு மருத்துவ குழுவினரை அனுப்பிஉடல்நலம் சரியில்லாமலிருந்த அவரது தாயிக்கு பரிசோதனை மற்றும் உதவி செய்ய சுகாதாரத்துறை பணியாளர்களை அனுப்பினார். அதனை புகைப்படத்துடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, “தாய்நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தங்கள் அர்ப்பணிப்பிற்கு தலைவணங்குகிறேன். கண்டிப்பாக தம்பி. கவலை கொள்ள வேண்டாம். தங்கள் தாய்க்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் உடனே கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.தங்கள் தாயாருக்கு தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் காய்ச்சலோ, இருமலோ, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் இல்லை. நலமாக உள்ளார். தாங்கள் தைரியமாக நிம்மதியுடன் இருங்கள்!” என வெளியிட்டுள்ளார். 

இதேபோல் சாமானிய மக்களின் கோரிக்கையும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி செவிசாய்க்க வேண்டும் என ட்விட்டரில் பலர் வலியுறுத்திவருகின்றனர்.