பாதிக்கு பாதி குறைந்தது விமான கட்டணம்! சொந்த ஊருக்கு பறக்க ஆசைப்படுபவர்கள் பறந்துகலாம்…

 

பாதிக்கு பாதி குறைந்தது விமான கட்டணம்! சொந்த ஊருக்கு பறக்க ஆசைப்படுபவர்கள் பறந்துகலாம்…

வாழ்நாளில் ஒருமுறையாவது விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பது பலரது ஆசையாக உள்ளது. மக்களது இந்த ஆசையை தூண்டும் விதமாக விமான நிறுவனங்களும் அவ்வப்போது மிகக் குறைந்த விலையில் விமான டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்து சலுகை வழங்கி வருகிறார்கள்.

வாழ்நாளில் ஒருமுறையாவது விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பது பலரது ஆசையாக உள்ளது. மக்களது இந்த ஆசையை தூண்டும் விதமாக விமான நிறுவனங்களும் அவ்வப்போது மிகக் குறைந்த விலையில் விமான டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்து சலுகை வழங்கி வருகிறார்கள். ஆனால் தற்போது கொரோனா அச்சம் காரணமாக விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ள நிலையில், சென்னையில் இருந்து பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான விமான கட்டணம் கணிசமாக குறைந்திருக்கிறது.

flights

சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் விமான கட்டணம் கடைசி நேரத்தில் டிக்கெட் புக் செய்தால் 8 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆனால் தற்போது டிக்கெட் கட்டணம் ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. தற்போது சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்ல விமான கட்டணம் ரூ.1200 ஆகவும், டெல்லி விமான கட்டணம் ரூ.3000 ஆகவும், மும்பை விமான கட்டணம் ரூ.2 ஆயிரமாகவும் வசூலிக்கப்படுகிறது