பாதிக்குப் பாதி ஆட்சி !  டீல் ஆர் நோ டீல்? சிவசேனாவின் அரசியல் !

 

பாதிக்குப் பாதி ஆட்சி !  டீல் ஆர் நோ டீல்? சிவசேனாவின் அரசியல் !

மகராஷ்டிரா மாநிலத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தலில் பாஜகவிற்கு பெரும்பாண்மை இல்லாததால் ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் ஆட்சியில் பங்கு வேண்டும் என பாஜக கொடி தூக்கியுள்ளது.

அக்டோபர் 21ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

மகராஷ்டிரா மாநிலத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தலில் பாஜகவிற்கு பெரும்பாண்மை இல்லாததால் ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் ஆட்சியில் பங்கு வேண்டும் என பாஜக கொடி தூக்கியுள்ளது.

sivasena

அக்டோபர் 21ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. மொத்தமாக அங்கு 56.33% வாக்குகள் பதிவானது. அதேபோல் ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அங்கு 61.63% வாக்குகள் பதிவானது. அக்டோபர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் பெரும்பாலான இடங்களை பாஜக கைப்பற்றி உள்ளது. 
எனினும் பாஜக-வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சிவசேனா ஆதரவுடன் ஆட்சி அமைக்கவேண்டிய சூழல் நிலவுகிறது. இதுகுறித்து பேசிய தாக்கரே,  50 சதவீதம் ஆட்சியில் பங்களிப்பை தருவதாக பாஜக தலைவர் அமித் ஷா உறுதி அளித்ததாக தெரிவித்தார். குறைந்த தொகுதியில் போட்டியிட சிவசேனா ஒப்புக்கொண்டது உண்மைதான் என தெரிவித்த தாக்கரே கட்சியை வளர்க்க வேண்டிய சூழல் வந்துவிட்டதாகக் கூறியுள்ளார். ஆதித்யா தாக்கரே துணை முதல்வராக நியமிக்கப்பட்டாலும், பாதி ஆட்சியில் அவர் முதல்வராக வேண்டும் என்று சிவசேனா எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. சிவசேனாவின் கோரிக்கை ஏற்கப்படுமா என்று இன்று அல்லது நாளை தெரியவரும்.
இதுகுறித்து பட்நாவிஸ் தெரிவித்தபோது எதிர் அணியில் 20 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும், பாதிக்கு பாதி ஆட்சி கொடுக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைப்பதில் பல்வேறு சிக்கல்களை சிவசேனா அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.