பாட்டு பாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்தும் காவலர்!

 

பாட்டு பாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்தும் காவலர்!

காவல் துறை அதிகாரிகளும் ஆங்காங்கே கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்து அந்தந்த மாநில நிர்வாகம் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் படி, மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது என்றும் அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

ttn

அதே போல காவல் துறை அதிகாரிகளும் ஆங்காங்கே கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் துணை ஆய்வாளர் பாடல் பாடி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதன் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கையான கைகளை கழுவுதல், சமூக விலகல் உள்ளிட்டவற்றை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். மேலும், கோமங்கலம் சுற்றியுள்ள பல கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்திய இவர், இன்னும் பல கிராமங்களுக்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.