பாட்டிலை புடி ..விடியும் வரை குடி-குஷியில் குடிகாரர்கள் .- தள்ளாடும் அரசை தாங்கிப்பிடிப்பார்களாம் 

 

பாட்டிலை புடி ..விடியும் வரை குடி-குஷியில் குடிகாரர்கள் .- தள்ளாடும் அரசை தாங்கிப்பிடிப்பார்களாம் 

உ.பி.யில்  சொகுசு ஹோட்டல்களின் ‘பார்’களில்   அதிகாலை வரை மதுபானங்களை பரிமாற அனுமதிக்கப்படுகிறது .இந்த நடவடிக்கை உத்தரப்பிரதேசத்தின் பெரிய நகரங்களான லக்னோ, கான்பூர், மீரட் மற்றும் நொய்டாவில் தற்போது செயல்படுத்தப்படும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தற்போது, பெரும்பாலான ஹோட்டல்களும், பார்களும் நள்ளிரவு வரைதான் மதுபானம் பரிமாற அனுமதிக்கப்படுகின்றன

உ.பி.யில்  சொகுசு ஹோட்டல்களின் ‘பார்’களில்   அதிகாலை வரை மதுபானங்களை பரிமாற அனுமதிக்கப்படுகிறது .இந்த நடவடிக்கை உத்தரப்பிரதேசத்தின் பெரிய நகரங்களான லக்னோ, கான்பூர், மீரட் மற்றும் நொய்டாவில் தற்போது செயல்படுத்தப்படும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

reddy

தற்போது, பெரும்பாலான ஹோட்டல்களும், பார்களும் நள்ளிரவு வரைதான் மதுபானம் பரிமாற அனுமதிக்கப்படுகின்றன.

reddy

உத்தரபிரதேசத்தில் நட்சத்திரமிட்ட ஹோட்டல்களும் மதுக்கடைகளும் அதிகாலை வரை மதுபானம் வழங்க அனுமதிக்கப்படும் – இது அரசுக்கு கூடுதல்   வருவாயை ஈட்ட எடுக்கப்பட்ட  முடிவு என்று கூறினர் .இந்த  புதிய கொள்கை ஏப்ரல் மாதமோ அல்லது  அடுத்த நிதியாண்டிலோ  செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

restarent

 பார்கள் மற்றும் ஹோட்டல்கள்  தங்கள் நேரத்தை  நீட்டிக்க அரசாங்கத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் – ரூ .5 லட்சம் செலுத்தினால் நட்சத்திர ஹோட்டல்கள்   அதிகாலை 4 மணி வரையும்  மற்றும் பார்கள்  ரூ .2.5 லட்சம் செலுத்தி அதிகாலை 2 மணி வரை திறக்கலாம் , “என உத்தரபிரதேசத்தின் கலால் துறையின்  அதிகாரி சஞ்சய் பூஸ்ரெடி கூறினார்.

இந்த நடவடிக்கை மாநிலத்திற்கு கூடுதல் வருவாயை ஈட்ட உதவும் என்றும், தற்போது மாநிலத்தின் பெரிய நகரங்களான லக்னோ, கான்பூர், மீரட் மற்றும் நொய்டாவில் செயல்படுத்தப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும்  செவ்வாயன்று , உ.பி. அரசாங்கம் மாநிலத்தில் உள்ள பீர் கடைகளிலும் ஒயின்களை விற்கலாம்  என்று முடிவு செய்திருந்தது – இதற்கு முன்னர் உ.பி.யில் அனுமதிக்கப்படவில்லை.