பாடகராக அறிமுகமானார் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளர்! அதுவும் இந்த படத்தில்!

 

பாடகராக அறிமுகமானார் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளர்! அதுவும் இந்த படத்தில்!

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி  தொகுப்பாளரான பிரியங்கா தற்போது பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

சென்னை: விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி  தொகுப்பாளரான பிரியங்கா தற்போது பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரியங்கா.நிகழ்ச்சியில் கலகலப்பாக தொகுத்து வழங்கி பலரையும் கவர்ந்து இழுத்துள்ளார். டிடியை தொடர்ந்து  இவருக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்றே கூறலாம். கடந்த வருடம் சிறந்த தொகுப்பாளருக்கான விருதையும் தட்டி சென்றார். 

priyanka

இவர் தற்போது ‘தேவராட்டம்’ படத்தின் மூலம் பின்னணிப் பாடகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். கொடிவீரன் படத்தையடுத்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தேவராட்டம்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

மேலும் விஜய் டிவி தொலைக்காட்சியை சேர்ந்த, டிடி, சிவகார்த்திகேயன் என பல தொகுப்பாளர்கள் நடிகர்களாக அறிமுகியுள்ள நிலையில், பிரியங்கா அவர்களை மிஞ்சுவது போல் வெள்ளி திரையில்  பின்னணி பாடகியாக அறிமுகமாகி உள்ளார். அதை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

இதையும் படிங்க: வலியும்,வேதனையும் வர்ணிக்க வார்த்தையே இல்லை: ஜே.கே.ரித்திஷின் மரணம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி உருக்கம்!