பாஜக வேட்பாளரால் பனாலாகும் பதவி… தூக்கியடிக்கும் எடப்பாடி..!

 

பாஜக வேட்பாளரால் பனாலாகும் பதவி… தூக்கியடிக்கும் எடப்பாடி..!

அமைச்சர் மணிகண்டனின் பதவி பறிக்கப்படலாம் என்கிற முணுமுணுப்பு அதிமுகவி ’பெல்’ அடிக்கிறது.

பாஜக ரொம்பவே வெற்றியை எதிர்பார்த்த தொகுதி ராமநாதபுரம்.  அங்கு அதிமுக கூட்டணி சார்பில், பாஜக வேட்பாளராக அதிமுகவிலிருந்து கட்சி மாறிய நயினார் நாகேந்திரன் நிறுத்தப்பட்டிருந்தார்.மணிகண்டன்

தொகுதியின் முழு பொறுப்பு அமைச்சர் மணிகண்டனிடம் தரப்பட்டிருந்தது. ராமநாதபுரம் மாவட்டட்தில்  நடந்த பரமக்குடி இடைத்தேர்தலுக்கான பொறுப்பு மட்டும் மாவட்டச் செயலாளர் முனியசாமியிடம் கொடுக்கப்பட்டிருந்தது. பரமக்குடி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எப்படியோ வெற்றி பெற்றுவிட்டார்.  ஆனால், ராமநாதபுரம் எம்பி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஓட்டுகள் எதிர்பார்த்ததை விட ரொம்பவும் குறைவாகவே கிடைத்தது. நயினார் நாகேந்திரன்

அதே நேரம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கணிசமான ஓட்டுகள் விழுந்திருக்கிறது. அமைச்சர் மணிகண்டன், வேட்பாளருக்கு கொஞ்சம் கூட ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததிலும் பெரும்பகுதி மக்களிடம் போய்ச்சேராமல் இடையிலேயே மாயமாகி விட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளும், குற்றச்சாட்டுகளும்  அதிமுக, பாஜ மேலிடங்களுக்கு புகார்களாக குவிந்து வருகின்றன.மணிகண்டன்

 ஏற்கனவே அதிமுகவில் இருந்து டி.டி.வி பக்கம் நிறைய பேர் தாவியதால், மணிகண்டன் மீது அதிமுக நிர்வாகிகள் தலைமைக்கு தொடர்ந்து புகார் தெரிவித்து இருந்தார்கள்.  இதனால் அமைச்சர் மணிகண்டனின் பதவி பறிக்கப்படலாம் என்கிற முணுமுணுப்பு அதிமுகவி ’பெல்’ அடிக்கிறது.