பாஜக.,வில் இணைகிறார் ஸ்டார் நடிகர் !

 

பாஜக.,வில் இணைகிறார் ஸ்டார் நடிகர் !

தமிழகத்தில் தாமரையை மலர செய்தே தீர வேண்டும் என்று டெல்லி தலைவர்கள் எடுத்த எல்லா முயற்சிகளுமே தோற்று போய்விட்டது. தாமரை, தமிழிசையின் வீட்டில் கூட மலராது என்கிற தகவலால் நொந்து நூடூல்ஸ் ஆகியிருக்கும் டெல்லி தலைமை, தெலுங்கு மாநிலங்களில் பார்வையை பலமாக வீசியிருக்கிறது. 

தமிழகத்தில் தாமரையை மலர செய்தே தீர வேண்டும் என்று டெல்லி தலைவர்கள் எடுத்த எல்லா முயற்சிகளுமே தோற்று போய்விட்டது. தாமரை, தமிழிசையின் வீட்டில் கூட மலராது என்கிற தகவலால் நொந்து நூடூல்ஸ் ஆகியிருக்கும் டெல்லி தலைமை, தெலுங்கு மாநிலங்களில் பார்வையை பலமாக வீசியிருக்கிறது. 

chiranjeevi

‘ஆபரேஷன் கமலம்’ என்கிற பெயரில் தெலுங்கு தேசத்தின் முக்கிய தலைவர்களுக்கு வலைவிரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.கட்சியை அக்கட தேசத்தில் பலமாக்க, முக்கிய தலைவர்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் காவித் துண்டை அணிவித்து வர வலை விரித்திருக்கிறது பாஜக. அதன் ஒரு பகுதியாக தான் சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் பாஜக., வில் இணைந்தார்கள். இன்னும் இணையப் போகிறவர்களின் லிஸ்ட் வரிசை கட்டி நிற்கிறதாம். ராயலசீமாவில் பெரிய குடும்பங்களைக் கூட வளைத்து விட்டதாகச் சொல்கிறார்கள். விரைவிலேயே இதற்கான அறிவிப்பு வெளியாகுமாம். 

chiranjeevi

மெகா ஸ்டார் சிரஞ்சீவி பிஜேபியில் சேரப்போகிறார் என்று தகவல்கள் இப்போது உலா வருகின்றன. அவர், பாஜக., முக்கியத் தலைவர்களை விரைவில் சந்திக்க உள்ளார் என்று கூறப் படுகிறது.இந்நிலையில், பிரஜா ராஜ்யம் கட்சியைத் தொடங்கி பின்னர் காங்கிரஸுடன் இணைந்து தொடர்ந்து வந்தாலும், சிரஞ்சீவி போன தேர்தலில் ஈடுபடவில்லை. தவிர, சிரஞ்சீவியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிந்து போனது. 

சிரஞ்சீவிக்கு பாஜக.வில் பெரிய பதவி குடுத்து வளைக்க வலை வீசியிருக்கிறார்கள் டெல்லி தலைவர்கள். சிரஞ்சீவியும் ஏறக்குறைய காவியில் கலந்துவிடும் முடிவில் இருக்கிறாராம். தவிர, சிரஞ்சீவியின் காப்பு இன சமூகம் ஆந்திராவில் ஏறக்குறைய 75 தொகுதிகளில் பலம் வாய்ந்ததாக இருப்பதால், எப்படியும் சிரஞ்சீவியை கட்சிக்குள் ஐக்கியமாக்கிவிடவேண்டும் என்று பலமான உத்தரவுகள் பறந்திருக்கிறது. 

sye ra

அநேகமாக சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ஹாரெட்டி’ படத்தின் ரிலீஸுக்கு முன்னாடியே பாஜக.வின் இணைப்பு படலம் இருக்கும் என்கிறார்கள்.