பாஜக பலசாலி? அதிர்ச்சி கிளப்பும் ரஜினி

 

பாஜக பலசாலி? அதிர்ச்சி கிளப்பும் ரஜினி

10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்க சென்றால் யார் பலசாலி என கேள்வி எழுப்பி ரஜினிகாந்த் மறைமுகமாக பாஜகவை பலசாலி என்கிறார் என விவாதங்கள் கிளம்பியுள்ளன

சென்னை: 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்க சென்றால் யார் பலசாலி என கேள்வி எழுப்பி ரஜினிகாந்த் மறைமுகமாக பாஜகவை பலசாலி என்கிறார் என விவாதங்கள் கிளம்பியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கூட்டணி அமைப்புது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரஜினி, பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சியினர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அப்போது கண்டிப்பாக அப்படித் தானே இருக்கும் என்றார். அவரது இந்த பதில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது.

இந்நிலையில், போயஸ் கார்டனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி இதுகுறித்து விளக்கமளிக்கையில், பாஜகவை ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதுவதாகவே கூறினேன். பாஜக ஆபத்தான கட்சியா என மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். இதில் தற்போது எனது கருத்தை நான் தெரிவிக்கமாட்டேன். 10 பேர் சேர்ந்து கொண்டு ஒருவருடன் யுத்தம் செய்ய சென்றால் யார் பலசாலி? அந்த 10 பேரா இல்லை அந்த ஒருவரா என கேள்வி எழுப்பினார்.

10 பேர் சேர்ந்து கொண்டு ஒருவருடன் யுத்தம் செய்ய சென்றால் யார் பலசாலி? என ரஜினிகாந்த் கேள்வி எழுப்பி மறைமுகமாக பாஜகதான் மிகப்பெரிய பலசாலி என கூறியிருக்கிறார். இதன் மூலம் அவரது நிலைப்பாடு என்ன என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். 

மேலும், பாஜகதான் பலசாலி என வெளிப்படையாக கூறினால் ரஜினியின் அரசியல் வாழ்க்கை தமிழகத்தில் பிசுபிசுத்து போய்விடும் எனவேதான் அவர் குழப்பமான முறையில் பதிலளித்திருக்கிறார் எனவும், ரஜினி அரசியல் பிரேவசம் செய்தால் நிச்சயம் அவர் பாஜகவின் முகமாகத்தான் இருப்பார் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.