பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளது: ரஜினிகாந்த்

 

பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளது: ரஜினிகாந்த்

5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளதை காண்பிக்கிறது என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை: 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளதை காண்பிக்கிறது என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜகவைவிட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக தான் ஆட்சி செய்யும் ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தனது ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.இதனால் பாஜக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளது என்பதை காண்பிக்கிறது. தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றார். 

முன்னதாக 10 பேர் சேர்ந்துகொண்டு ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி என ரஜினிகாந்த் சமீபத்தில் கேள்வி எழுப்பி மோடி பலமானவர் என்பது போல் அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது,