பாஜக- சிவசேனா சண்டை முடியும் வரை தன்னை முதல்வராக்கக்கோரி விவசாயி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்!

பாஜக- சிவசேனா சண்டை முடியும் வரை தன்னை முதல்வராக்கக்கோரி விவசாயி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்!

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வார காலமாகியும் ஆட்சி அமைப்பதில் தொடர் இழுப்பறி நீடித்துவருகிறது. இந்நிலையில் தன்னை முதல்வராக்கக் கோரி அம்மாநில விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் ஒன்றை அளித்துள்ளார். 

மகாராஷ்ட்ராவில் 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற கடந்த 24 ஆம் தேதி முடிவுகள் வெளியாகின. அதில் பாஜக 105 இடத்திலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிப்பெற்றது. ஆட்சியமைக்க  146 இடங்கள் தேவை என்பதால் சிவசேனா மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தன. மக்களவை தேர்தலின்போது கூட்டணி அமைப்பதற்கு முன் சம பங்கு அளிக்கப்படும் என சிவசேனா கட்சிக்கு பாஜக வாக்கு கொடுத்தது. ஆனால் தற்போது பாஜக சாக்குப்போக்கு சொல்வதால் ஆட்சியமைத்தில் இழுப்பறி நீடித்துவருகிறது. அதாவது முதலமைச்சர் பதவியை பாஜகவுக்கு இரண்டரை ஆண்டுகளுக்கும், சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டுகளுக்கும் விட்டுக்கொடுக்க பாஜக தயாராகவில்லை இதனால் பாஜக- சிவசேனா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

Farmer

இந்நிலையில் அம்மாநிலத்தின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீகாந்த் விஷ்ணு சிவசேனா- பாஜக கூட்டணியின் பிரச்னை முடியும் வரை தன்னை முதல்வராக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “ நாட்டில் பல பிரச்னைகள் இருக்கும்போது பதவிக்காக இழுப்பறி என்பது வேதனை அளிக்கிறது. பருவ மழையால் பயிர்கள் மழை, வெள்ளத்தில் நாசமடைந்துள்ளன, இதனால் விவசாயிகளின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. தன்னை முதல்வராக்கினால் விவசாயிகளின் பிரச்னைகளை சரிசெய்துவிடுவேன். என்னுடைய கடிதம் குறித்து ஆளுநரிடம் பரிசீலியுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ஆட்சியர் திகைத்துப்போய், கடிதத்தை பெற்றுக்கொண்டு விவசாயியை அனுப்பிவைத்தார்.