பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா இரண்டாகும்: கெஜ்ரிவால் எச்சரிக்கை

 

பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா இரண்டாகும்: கெஜ்ரிவால் எச்சரிக்கை

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா இரண்டாகும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டமாக தெரிவித்துள்ளார்.

சங்க்ரூர்: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா இரண்டாகும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டமாக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நிற்கின்றன.

இதற்கான பணிகளை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் முன்னின்று செய்து வருகின்றனர். அதன் நீட்சியாக, கொல்கத்தாவில் நேற்று மம்தா நடத்திய பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், இந்தியா முழுவதிலும் இருந்து 22 கட்சித் தலைவர் பங்கேற்று பேசினர். 

modi

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் சங்க்ரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாபில் அனைத்துத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்றும் இன்னும் 12 நாட்களில் வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். 

மேலும், பாஜக தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் மக்களின் நெஞ்சங்களில் நஞ்சை விதைத்து வருவதாக குற்றம்சாட்டிய அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா இரண்டாக பிறிந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.