‘பாஜகவை தோற்கடிக்க ஒன்றிணையுங்கள்’: காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு மம்தா அழைப்பு!

 

‘பாஜகவை தோற்கடிக்க ஒன்றிணையுங்கள்’:  காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு மம்தா அழைப்பு!

காங்கிரஸ் கட்சியிலிருந்த மம்தா பானர்ஜி  பின்னர் திரிணாமூல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

மேற்குவங்கம்: மேற்குவங்கத்தில் பாஜகவை தோற்கடிக்க திரிணாமுல் உடன் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஒன்றிணைய வேண்டும் என்று மம்தா பானர்ஜி  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

mamta

காங்கிரஸ் கட்சியிலிருந்த மம்தா பானர்ஜி  பின்னர் திரிணாமூல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்து  ஆட்சியைப் பிடித்தார். மம்தா. இதனால் இரு கட்சிகளுக்கும் வன்முறை ஏற்பட்டு வந்தது. இருப்பினும் கடந்த மக்களவை தேர்தலில் நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. மேற்கு வங்கத்தை பாஜக முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளது. இதனால் பாஜக – திரிணாமூல் காங்கிரசார்  மத்தியில் வன்முறை வெடித்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டது. மேலும் மம்தா செல்லும் இடமெல்லாம் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பி  வந்தனர். 

bjp

இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தில் பாஜகவை தோற்கடிக்க திரிணாமுல் உடன் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மேற்குவங்க சட்டசபையில் பேசிய அவர், பாஜக அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடும் என சந்தேகம் எழுகிறது. காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைவரும் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய அணியை ஒன்றுசேர்க்க வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டார். மம்தாவின் இந்த அழைப்பால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.