பாஜகவின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா நியமனம்?

இதுவரை எந்த ஒரு புகாரும் இல்லாதவராக இருக்கும் ஜே.பி.நட்டா, மோடி மற்றும் அமித் ஷாவின் நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கிறார். அவர் பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. முந்தைய மோடி அரசில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சராக பொறுப்பு வகித்துவந்தார். நட்டா தவிர பூபேந்திர யாதவ், ஓபி மாத்தூர் உள்ளிட்ட மேலும் சிலரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

அமித் ஷா மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளதால், பாஜகவின் கொள்கைப்படி ஒரு நபருக்கு ஒரு பதவி என்பதால் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து அவர் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமித் ஷா இடத்தில் கட்சியை வழிநடத்திச் செல்ல தகுதியான தலைவர் யார் என்று மோடியும் அமித் ஷாவும் ஆலோசனை நடத்தினர்.

JP Nadda