பாஜகவிடமிருந்துதான் விலகினோம்; இந்துத்துவ கொள்கையிலிருந்து அல்ல- உத்தவ் தாக்கரே!

 

பாஜகவிடமிருந்துதான் விலகினோம்; இந்துத்துவ கொள்கையிலிருந்து அல்ல- உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிரா முதல்வராக கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதியன்று உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அவர் முதல்வராக பதவியேற்று நேற்றுடன் 100 நாட்கள் பூர்த்தியானதை தொடர்ந்து. முதல்வர் உத்தவ் தனது குடும்பத்துடன் நேற்று அயோத்திக்கு சென்று ராம ஜென்மபூமியில் வழிபாடு நடத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, “கடந்த 2018 நவம்பரில் நான் அயோத்தி வந்தபோது ராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. பிறகு, 2வது முறை கடந்த 2019, நவம்பரில் இங்கு வந்தபோது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பு என்னை பொறுத்தவரை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் பிறகு, நான் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றேன். இப்போது, 3வது முறையாக இங்கு வந்திருக்கிறேன்.

Uddhav Thackeray

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கிறேன் என உ.பி. உதலமைச்சரிடம் வாக்கு கொடுத்துள்ளேன். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்திருப்பதால் இந்துத்துவ கொள்கையில் இருந்து எங்கள் கட்சி விலகி விட்டதாக பா.ஜனதா தலைவர்கள் விமர்சிக்கிறார்கள். நாங்கள் பாஜகவிடம் இருந்துதான் விலகியிருக்கிறோம். இந்துத்துவ கொள்கையில் இருந்து விலகவில்லை. இந்துத்துவ கொள்கையில் சிவசேனா எப்போதும் உறுதியாக இருக்கும்” எனக் கூறினார்.