பாக். முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ரத்து! 

 

பாக். முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ரத்து! 

1998 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் ராணுவ படைத்தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப், திடீரென ராணுவ புரட்சி மூலம் 1999 ஆம் ஆண்டு அந்நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினர். 2001 ஆம் ஆண்டு அவர் தன்னை பாகிஸ்தானின் அதிபராக அறிவித்துக் கொண்டார்.

1998 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் ராணுவ படைத்தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப், திடீரென ராணுவ புரட்சி மூலம் 1999 ஆம் ஆண்டு அந்நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினர். 2001 ஆம் ஆண்டு அவர் தன்னை பாகிஸ்தானின் அதிபராக அறிவித்துக் கொண்டார். அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் அதிபராக இருந்தார். அவர் ஆட்சியில் இருந்த போதே பாகிஸ்தானின் அரசமைப்பு சட்டத்தை முடக்கி, அவசர நிலையி பிரகனப்படுத்தினார். இது பாகிஸ்தானை அவருக்கு எதிராக வலுவாகத் திரும்பச் செய்தது. இதனால் இவர் மீது கடந்த 2013 ஆம் ஆண்டு தேசத் துரோக வழக்கைப் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தொடர்ந்தது.  2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, பெர்வேஸ் முஷாரப் தனது அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு துபாயில் வசித்து வந்தார்.  

musharraf

பெர்வேஸ் முஷாரப்புக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்துவந்த இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு தூக்குதண்டனை விதித்து உத்தரவிட்டது. முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. இந்நிலையில் முஷாரப் தனக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ரத்துசெய்யக்கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மறு சீராய்வு மனுவை விசாரித்த லாகூர் லாகூர் நீதிமன்றம் பர்வேஸ் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.