பாக். பிரதமருக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டம்..!

 

பாக். பிரதமருக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டம்..!

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா பொதுக்கூட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள தலைவர்கள் பங்கேற்றனர்.

அமெரிக்காவில் நடைபெற்ற ஐநா பொது கூட்டத்தில் சர்ச்சையான விவகாரத்தை பேசியதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா பொதுக்கூட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள தலைவர்கள் பங்கேற்றனர். இந்திய பிரதமர் மோடி இதில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். 

Narendra modi

அதுபோல இங்கே பேசுவதற்கு பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியா ஜம்மு காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது குறித்த விவகாரத்தை பேசினார். அச்சமயம் இரு அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகளும் மோதிக்கொண்டால் உலக அமைதி கெடும் என்ற சர்ச்சையான கருத்தையும் தெரிவித்திருந்தார். 

Pakistan prime minister

இவரின் சர்ச்சையான கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறுகையில், ஐநாவில் பேசிய இம்ரான்கான் அனைத்து இந்தியர்களையும் ஆத்திரமூட்டும் வகையிலும் மிகவும் பொறுப்பற்ற முறையிலும் பேசியிருக்கிறார். மற்ற நாடுகளை இந்தியாவுக்கு எதிராக திருப்பும் நோக்கில் அவரது பேச்சு இருந்தது. 

வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார்

இதற்கு, கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். காஷ்மீர் விவகாரத்தை மலேசியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் வெளியே எடுத்தன. இந்தியாவுடன் நல்ல நட்புறவில் இருக்கும் மலேசியா இதுபோன்ற கருத்துக்களை பேசுவதற்கு முன்பாக நன்கு யோசித்து விலகி இருக்க வேண்டும். அதேபோல துருக்கி நாட்டிற்கு இந்தியாவின் சூழ்நிலை என்னவென்று தெரியாது. முழுமையாக ஆராய்ந்து பிறகு பொதுக்கூட்டத்தில் பேச்சை எடுக்க வேண்டும். 

பாகிஸ்தான் பிரதமரின் முறையற்ற பேச்சை கேட்டுக்கொண்டு மற்ற நாடுகள் துணை நிற்க வேண்டாம் என பேசினார்.