பாக்யராஜ் ராஜினாமாவிற்கு காரணம் கார்ப்பரேட் கிரிமினலின் மிரட்டல்? பரபர பின்னணி தகவல்கள்

 

பாக்யராஜ் ராஜினாமாவிற்கு காரணம் கார்ப்பரேட் கிரிமினலின் மிரட்டல்? பரபர பின்னணி தகவல்கள்

பாக்யராஜை கார்ப்பரேட் கம்பெனி ஒன்று மிரட்டியதால்தான் அவர் எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: பாக்யராஜை கார்ப்பரேட் கம்பெனி ஒன்று மிரட்டியதால்தான் அவர் எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்கார் திரைப்பட கதை திருட்டு விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக கே.பாக்யராஜ் செயல்பட்ட நிலையில், எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். போட்டியின்றி ஒருமனதாக தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பாக்யராஜ், 6 மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ், முக்கிய உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே சர்கார் பட விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டோம். ஆனால், அதில் பல சங்கடங்களை சந்திக்க நேர்ந்தது. அதில் முக்கியமாக தேர்தல் வைத்து முறைப்படி தலைவராக தேர்ந்தெடுக்கப்படாததுதான் காரணம் என கருதுகிறேன். முறைப்படி தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை ஆதரவோடு தலைவர் பொறுப்பை ஏற்று தொடர்ந்து கடமையோட செயல்பட தயார் என்று கூறியிருந்தார். ஆனால் பாக்யராஜின் ராஜினாமாவை தென்னிந்திய எழுத்தாளர் சங்க்ம் ஏற்க மறுத்துள்ளது.

baggi

இந்நிலையில் பாக்யராஜ் எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ய, ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனியின் மிரட்டல்தான் காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பாக்யராஜ் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் இனி வரும் காலத்தில் பாக்யராஜ், அவரது மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு ஆகியோர்களில் யார் எந்த படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தாலும் அந்த படத்திற்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்குவோம் என அந்த கார்ப்பரேட் கம்பெனி மிரட்டியதாகவும், சர்கார் கதையை வெளியில் கூறியதற்காக பாக்யராஜிடம் ரூ 25 கோடி இழப்பீடு தொகை கேட்டு வழக்கு தொடரப்போவதாகவும் அந்த கம்பெனி மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சர்கார் திரைப்பட டீசரில், நான் ஒரு கார்ப்பரேட் கிரிமினல் என்ற வசனம் இருக்கும் நிலையில் தற்போது கார்ப்பரேட் நிறுவனம் பாக்யராஜை மிரட்டியதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் கோடம்பாக்கத்தை அதிரவைத்துள்ளது.