“பாக்கெட் பால் பயங்கரம்” நமக்கு சீக்கிரம் பால் ஊற்ற இருக்கும் பாக்கெட் பால்”-79% பால் சுத்தமானதில்லையாம்

“பாக்கெட் பால் பயங்கரம்” நமக்கு சீக்கிரம் பால் ஊற்ற இருக்கும் பாக்கெட் பால்”-79% பால் சுத்தமானதில்லையாம்

நுகர்வோர் சுகாதார துறை அதிகாரிகள் (CGSI) நடத்திய சோதனையில் மாநிலத்தில் விற்கப்படும் 79% பாக்கெட் பால் FSSAI தர கட்டுப்பாட்டிற்குள் வரவில்லையாம் .அதற்குள் மக்களுக்கு கேடு உண்டாக்கும் பொருட்கள் கலக்கப்பட்டிருக்கிறதாம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019 டிசம்பர் முதல் ஜனவரி வரை 413 பால் நிறுவனங்களின் பாக்கெட் பாலை அதிகாரிகள் சோதனை செய்ததில் 21 %பால் பாக்கெட் மட்டும்தான் FSSAI தர கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறதாம் .மற்றவை அதன் தரப்படி இல்லையாம்.

milk-90

இதுபற்றி CGSI சேர்மன் டாக்டர் சீதாராம் தீட்சித் கூறுகையில் ,பால் நம் அனைவர்க்கும் முக்கியமான ஊட்ட பொருள் ,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கும் இதில் கடந்தாண்டை விட 5% அதிக கலப்படமுள்ளது, அரசு பாலில் கலப்படம் செய்வோருக்கு ஜாமீனில் வெளிவராதபடி கடுமையான சிறைத்தண்டனை அளித்தால் மட்டுமே இதை தடுக்க முடியுமென்றார்.

அவர் மேலும் பால் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளும் வசதியை அரசு ஏற்படுத்தி தந்துள்ளது என்றார்.இதுபற்றி அஞ்சலி என்ற நுகர்வோர் கூறுகையில் பாலை குழந்தைகளுக்கு ஒரு முக்கிய உணவாக கொடுக்கிறோம் ,இப்போது பிராண்ட் பாக்கெட் பாலிலும் கலப்படமுள்ளது என்ற செய்தி கேட்டு திகைப்புக்குள்ளானேன் ,அரசு  சுத்தமான பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்