பாகுபலி பிரபாஸ் வீட்டு முன்பு அவரது ரசிகர்கள் செய்த அட்டகாசத்தை பாருங்க…!

 

பாகுபலி பிரபாஸ் வீட்டு முன்பு அவரது ரசிகர்கள் செய்த அட்டகாசத்தை பாருங்க…!

நடிகர் பிரபாஸின் ரசிகர்கள் அவர் விட்டு முன்பு அட்டகாசம் செய்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 

சென்னை: நடிகர் பிரபாஸின் ரசிகர்கள் அவர் விட்டு முன்பு அட்டகாசம் செய்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 

‘பாகு பலி’ படத்தின் மூலம் தனக்கு என ஒரு ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளவர் நடிகர் பிரபாஸ். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘சாஹோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருக்கு இந்திய மட்டுமின்றி மற்ற நாடுகளில் ரசிகர்கள் குவிந்துள்ளனர். 

அந்த வகையில் தற்போது பிரபாஸின் ரசிகர்கள் சிலர் ஜப்பானிலிருந்து, ஹைதராபாத்திற்குச் சுற்றுலா வந்துள்ளனர். அப்போது பிரபாஸ் வீட்டைக் கண்டதும், அந்த இடத்தில் இறங்கி அவர் வீட்டின் கேட் முன்பு நடனமாடிப் படி அட்டகாசம் செய்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில்  வைரலாக பரவி வருகிறது. 

prabhas

முன்னதாக இதே போன்று பிரபாஸ்க்கு ஜப்பான் ரசிகை ஒருவரிடமிருந்து கடிதம் வந்ததிருந்தது குறிப்பிடத்தக்கது.