பாகுபலி பிரபாஸுடன் நேருக்கு நேர் மோதும் ஜெயம் ரவி! 

 

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோமாளி. இதில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகும் என்று ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவித்துள்ளார். இதில் ஜெயம் ரவி 9 விதமான கதாபாத்திரத்தில் நடித்து அசதியுள்ள இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெரும் என்றே எதிர்ப்பாக்கப்படுகிறது. 

மேலும் ஆகஸ்ட் 15ம் தேதி பிரபாஸின் ‘சாஹோ’ திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.