பழனி தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

 

பழனி தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஆண்டுதோறும் பழனி தண்டாயுதபாணி  சுவாமி கோயிலில் நடைபெறும் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

ஆண்டுதோறும் பழனி தண்டாயுதபாணி  சுவாமி கோயிலில் நடைபெறும் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவை முன்னிட்டு,  தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து பால் காவடி, பன்னீா் காவடி  உள்ளிட்ட காவடிகளை எடுத்து பாதயாத்திரையாக கோவிலை வலம் வருகின்றனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா, இன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9.55மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ttn

இந்த பத்து நாட்களும் முருக பெருமான் வெள்ளி, தேவயானையுடன் பெரியநாயகியம்மன் கோயில் மண்டபத்தில் வெள்ளிக் காமதேனு, தந்தசப்பரம் உள்ளிட்ட பல வகையான வாகனங்களில் உலா வருகிறார். இதனையடுத்து வரும் 7 ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், அன்று இரவு வெள்ளித்தோ் உலாவும் நடைபெறும்.

tttn

இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று நண்பகல் 12 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயில் தேரடியில் தேரேற்றமும், மாலை 4 மணிக்கு தைப்பூச தேரோட்டமும் நடைபெறும். இந்த 10 நாட்களும் பக்தி இன்னிசை, பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.