பழனி –  கோயம்பத்தூர் இடையே புதிய பயணிகள் ரயில் அறிமுகம்! 

பழனி –  கோயம்பத்தூர் இடையே புதிய பயணிகள் ரயில் அறிமுகம்! 

கோயம்புத்தூர் மற்றும் பழனி இடையிலான பயணியர் ரயில் சேவையினை நாளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தொடங்கிவைக்கவுள்ளார். இந்த ரயில் 16.10.2019 முதல் சேவையை தொடங்கும். 

கோயம்புத்தூர் மற்றும் பழனி இடையிலான பயணியர் ரயில் சேவையினை நாளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தொடங்கிவைக்கவுள்ளார். இந்த ரயில் 16.10.2019 முதல் சேவையை தொடங்கும். 

பழனி ரயில் நிலையத்திலிருந்து காலை 10.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், புஷ்பத்தூர் ரயில் நிலையத்திற்கு காலை 11.00 மணிக்கு சென்றடையும். மடத்துக்குளம் ரயில் நிலையத்துக்கு காலை 11.10 மணிக்கு, மைவாடி ரோடு ரயில் நிலையத்திலிருந்து காலை 11.19 மணிக்கும் சென்றடையும்.

Train

இதேபோல் உடுமலைப்பேட்டை ரயில் நிலையத்தை காலை 11.32 மணி சென்றடையும் இந்த ரயில், கோமங்கலம் ரயில் நிலையத்துக்கு காலை 11.46 மணிக்கு புறப்படும். இதையடுத்து பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து மதியம் 12.20 மணிக்கு சென்றடைந்து கிணத்துக்கடவு ரயில் நிலையத்திலிருந்து மதியம் 12.47 மணிக்கு சென்றடையும். போத்தனூர் ரயில் நிலையத்துக்கு 1.25 மணிக்கு நின்று செல்லும் இந்த ரயில் இறுதியாக கோயம்புத்தூர் ரயில் நிலையத்தை மதியம் 2.10 மணிக்கு சென்றடையும்.

இதேபோல்  கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 01.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், பழனி ரயில் நிலையம் மாலை 04.40 மணிக்கு வந்தடையும்.