பழங்குடியின சிறுவன் குடும்பத்தினருடன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சந்திப்பு!

 

பழங்குடியின சிறுவன் குடும்பத்தினருடன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சந்திப்பு!

பேரன் போல  நினைத்து தான் அவ்வாறு செய்ய சொன்னேன். இருப்பினும் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். 

நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகள் புத்துணர்வு முகாமை  தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருகை புரிந்தார். அப்போது  புல்வெளியில் நடந்து சென்று கொண்டிருந்த திண்டுக்கல்  சீனிவாசன் செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. அப்போது அங்கிருந்த பழங்குடியின சிறுவனை சீனிவாசன், டேய்  வாடா வாடா செருப்பை கழற்றிவிடுடா என்று கூற சிறுவனும் அவரின்  செருப்பை கழற்றிவிட்டார்.

 

 இந்த சம்பவத்தின் போது  எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இதுகுறித்து விளக்கமளித்த திண்டுக்கல் சீனிவாசன், ‘பெரியவர்களை அழைத்தால் தவறாகிவிடும் என்பதால் தான்  பேரன் போல  நினைத்து தான் அவ்வாறு செய்ய சொன்னேன். இருப்பினும் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். 

இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சிறுவன் மற்றும் அவரின் குடும்பத்தை நேரில் அழைத்து பேசியுள்ளார். ஊட்டியில் உள்ள விருந்தினர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறுவன் மற்றும் அவரது பெற்றோரிடம் வருத்தம் தெரிவித்தேன்’ என்றார். 

 

முன்னதாக  பாதிக்கப்பட்ட பழங்குடியின  சிறுவன் கேத்தன் தெப்பகாடு பகுதி  மக்களுடன் சென்று மசினகுடி காவல் நிலையத்தில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.