பழங்குடியினரைவிட்டு அவர்களுக்கு சொந்தமான வாழை மரங்களை வெட்டித்தள்ளிய வனத்துறை! – கொடைக்கானலில் நடந்த கொடூரம்

 

பழங்குடியினரைவிட்டு அவர்களுக்கு சொந்தமான வாழை மரங்களை வெட்டித்தள்ளிய வனத்துறை! – கொடைக்கானலில் நடந்த கொடூரம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெரியூர்  குடியிருப்பைச் சேர்ந்த பளியர் பழங்குடியினரான கண்ணன் (வயது 60 ) ராஜா ( 45) முருகன் (55) லட்சுமணன் (65) மற்றும் கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் தங்களின் விவசாய நிலத்தில் வாழை விவசாயம் செய்து வந்தனர்.

கொடைக்கானலில் அரசு நிலத்தில் விவசாயம் செய்ததாக கூறி பழங்குடியினரின் வாழைத் தோப்புக்குள் புகுந்த வனத்துறையினர், அவற்றை பழங்குடியினரைவிட்டே வெட்டி சாய்த்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெரியூர்  குடியிருப்பைச் சேர்ந்த பளியர் பழங்குடியினரான கண்ணன் (வயது 60 ) ராஜா ( 45) முருகன் (55) லட்சுமணன் (65) மற்றும் கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் தங்களின் விவசாய நிலத்தில் வாழை விவசாயம் செய்து வந்தனர். கடந்த மே 2ம் தேதி அங்கு வந்த தேவதானப்பட்டி வனச்சரகத்தை சேர்ந்த வனத்துறையினர் பழங்குடிகளை வைத்தே வெட்ட வைத்துள்ளனர் வனத்துறையினர்.  முன்னறிவிப்பு நோட்டீஸ் ஏதும் கொடுக்காமல் அவர்களிடமே இது ஆக்கிரமிப்பு நிலம் என்று எழுதி வாங்கி விட்டு அவர்கள் கையாலேயே வெட்ட வைத்துள்ளனர்.

காடுகளுடன் தொடர்பு இல்லாதவர்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்  வன நிலங்களை ஆக்கிரமித்து  சுகபோகமாக இருக்கும்போது, வனத்தின் பூர்வகுடிகள் உயிர் வாழ்வதற்க்காக –  உணவிற்காக பயிர் செய்வதைத் தடுத்து, அட்டூழியம்  செய்வதும், பழங்குடிகளை ஒடுக்குவதும்  மிகப்பெரிய அநீதியாக்கும். இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “எங்களை விட்டே எங்கள் விளை நிலத்தை வனத்துறையினர் அழித்து சென்றனர். எங்களுக்கு உதவ யார் வந்தாலும் அவர்களை வனத்துறையினர் தடுத்து வருகின்றனர். தகவல் அறிந்து கிராமத்துக்கு வந்த தாசில்தார் உள்ளிட்டவர்களை வனத்துறையினர் அனுமதியின்றி வனப் பகுதிக்குள் எப்படி வரலாம் என்று கேட்டு அவமானப்படுத்தினர். 
மலை கிராமங்களை வனத்துறை தத்தெடுத்துள்ளது என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களும் உதவுவதில்லை, உதவிகள் செய்ய வருபவர்களையும் தடுக்கின்றனர். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் உதவிப் பொருட்களைக் கொடுக்கிறார்கள். இவர்கள் யார் எங்களை தத்தெடுக்க? 
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பொள்ளாச்சி – வேட்டைக்காரன் புதூர் அருகே இரண்டு புலிகளை விஷம் வைத்துக் கொன்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை (தோட்ட உரிமையாளர்களை)  கைது செய்யாமல் தோட்டத்தில் வேலை பார்த்த 4  அப்பாவி விவசாய கூலித்தொழிலாளர்களான  தலித், ஆதிவாசி பழங்குடியினரை, கைது செய்தவர்கள். இன்று வரை உண்மை குற்றவாளிகள் கைது செய்ய முடியவில்லை. வன ஆக்கிரமிப்பாளர்களிடம் விலை போன தவறான அதிகாரிகள் நிறைந்த  வனத்துறையினர்தான் தங்கள் வீரத்தையும், அதிகாரத்தையும் ஏழை எளியவர்களிடமும், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும்  காட்டுகிறார்கள்” என்றனர்.